Tamil News  /  Entertainment  /  Sivakarthiyen Latest Interview About Experimental Attempt Ayalan Movie And His Struggle Life

Sivakarthiyen: ‘என்ன நம்பி அவளையே கொடுத்துட்டாங்க.. ஆனா..’ சிவகார்த்திகேயன் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2024 06:02 PM IST

நல்ல சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன் என்னை நம்பி பொண்ணும் கொடுத்து விட்டார்கள். நான் நினைத்து இருந்தால் அங்கேயே உட்கார்ந்து இருந்திருக்கலாம்.

சிவ கார்த்திகேயன்.
சிவ கார்த்திகேயன்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசிய சிவகார்த்திகேயன், "அயலான் போன்ற புதுமையான கதைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மட்டும் எனக்கு எந்த விதமான பயமும் வந்ததில்லை. இது போன்ற கதைகளை செய்யும் போது மட்டும் எனக்கு ஒரு விதமான  தைரியம் வந்து விடும்.

கமர்சியல் படங்களை மட்டும் தான் நான் பார்த்து பார்த்து செய்வேன். காரணம் அதை மிகச் சரியாக பார்வையாளரிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். ஆனால்  இது போன்ற வித்தியாசமான படங்களை பொறுத்தவரை இதை நம்மால் செய்ய முடியும் எந்த ஒரு  தைரியம் எனக்கு வந்துவிடும். நான் அவ்வளவு தைரியமாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், இது போன்ற படங்களில் முக்கிய நம்பிக்கை நங்கூரமாக இருப்பது நான்தான். 

அப்படி இருக்கையில் நானே சந்தேக உணர்வுடன் இருக்க முடியாது. முதலில் அதை நான் நம்ப வேண்டும். நான் அதனை நம்பவில்லை என்றால் அது நடக்கவே நடக்காது. நான் இயக்குநரிடம் சென்று இது எப்படி வரும் என்ற சந்தேகத்தை எழுப்பி கொண்டே இருந்தால் அவர் என்னை சமாளிப்பதில் கவனம் செலுத்துவாரா? இல்லை படத்தை எடுப்பதில் கவனம் செலுத்துவாரா? 

இது போன்ற  முயற்சிகளை எடுக்கவில்லை என்றால் நான் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கவே மாட்டேன். நான் விஜய் டிவியில் வேலை செய்யும் பொழுது, நல்ல பிரபலமான ஆங்கராக மாறிவிட்டேன்.

நல்ல சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன் என்னை நம்பி பொண்ணும் கொடுத்து விட்டார்கள். நான் நினைத்து இருந்தால் அங்கேயே உட்கார்ந்து இருந்திருக்கலாம்.

 

ஆனால் நான் பரிச்சார்த்த முயற்சிகளை என் வாழ்க்கையில் எடுத்த காரணத்தினால் தான் நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். ஆகையால் இது போன்ற கதைகளை நான் அவ்வப்போது முயற்சி செய்து கொண்டே தான் இருப்பேன்" என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.