Sivakarthikeyan: சினிமாவை விட்டு விலக முடிவு.. மனைவி ஆர்த்தி சொன்ன அந்த வார்த்தை தந்த மாற்றம்.. சிவகார்த்திகேயன் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: சினிமாவை விட்டு விலக முடிவு.. மனைவி ஆர்த்தி சொன்ன அந்த வார்த்தை தந்த மாற்றம்.. சிவகார்த்திகேயன் பேச்சு

Sivakarthikeyan: சினிமாவை விட்டு விலக முடிவு.. மனைவி ஆர்த்தி சொன்ன அந்த வார்த்தை தந்த மாற்றம்.. சிவகார்த்திகேயன் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 08, 2025 04:15 PM IST

Sivakarthikeyan: எனக்கு வரும் அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் குடும்பத்தை பாதிக்ககூடாது என கருதி சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன். ஆனால் அப்போது மனைவி சொன்ன வார்த்தை தான் சினிமாவில் என்னை தொடர வைத்தது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சினிமாவை விட்டு விலக முடிவு.. மனைவி ஆர்த்தி சொன்ன அந்த வார்த்தை தந்த மாற்றம்.. சிவகார்த்திகேயன் பேச்சு
சினிமாவை விட்டு விலக முடிவு.. மனைவி ஆர்த்தி சொன்ன அந்த வார்த்தை தந்த மாற்றம்.. சிவகார்த்திகேயன் பேச்சு

இதையடுத்து அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கிடையே பிரபல ஊடகமான ஹாலிவுட் ரிப்போர்டருக்கு பேட்டியளித்துள்ள சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நடிப்புக்கு முழுக்கு போட முடிவு

அதில், ஒரு சமயத்தில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்தபோது, தனது மனைவி சொன்ன விஷயத்தால் நடிப்பை தொடர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் பேசியதாவது, "சினிமாத்துறை மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனால் அதில் இருக்கும் சில தனிப்பட்ட நபர்களால் பிரச்னை ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட கடினமான காலகட்டத்தில் எனது போராட்டம் எந்த விதத்திலும் எனது குடும்பத்தினரை பாதிக்க கூடாது என நினைத்தேன். அவர்களின் வழக்கமான வாழ்க்கையில் பிரச்னைகள், சவால்கள் வர விரும்பவில்லை.

எனக்கு ஏற்பட்ட அழுத்தம், பொருளாதார நெருக்கடிகள் எனது மனைவி, சொந்தபந்தங்கள், குழந்தைகளுக்கு சுமையை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

மனைவி சொல்லே மந்திரம்

இந்த நேரத்தில் எனது மனைவி ஆர்த்தி ஒரு விஷயத்தை சொன்னார். நீங்கள் எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள். கடந்த 20 ஆண்டுகளில் அஜித்குமார், விக்ரம் போன்றவர்களுக்கு அடுத்து சினிமா பின்புலம் இல்லாமல் இவ்வளவு பெரிய இடத்துக்கு சினிமா துறையில் முன்னேறியது இல்லை. இது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை. எனவே சினிமாவை விட்டு விட வேண்டாம் என சொன்னார். எனது நடசத்திர அந்தஸ்து அவருக்கு பல்வேறு நன்மைகளை கொடுத்தாலும், பல்வேறு எதிர்மறையான விஷயங்களையும் தந்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்களில் ஒருவனாக இருந்து வெற்றிகரமான நடிகராக மாறிய என்னை சினிமாவில் நல்லபடியாக வரவேற்றார்கள். சிலர் வெளிப்படையாக பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தார்கள். அப்போது தான் சினிமா துறையில் நான் யார் என்பதை சிந்திக்க வைத்தது.

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு துயரங்களை தாண்டி, எவ்வித மோதல்களும் இன்றி முன்னேறி எனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளேன். எனவே எனது வெற்றிகள் விமர்சகர்களுக்கு பதிலடி தருபவையாக இல்லாமல், எனது படங்களுக்காக உழைத்தவர்களை கொண்டாடும் விதமாகவும், ரசிகர்களுக்கான விருந்தாகவும் பார்த்தேன்" என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் புதிய படங்கள்

கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், அமரன் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் அயலான் படம் ரூ. 80 கோடிக்கு மேலும், அமரன் படம் ரூ. 300 கோடிக்கும் மேலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 25வது படத்தில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த இரு படங்களும் 2025ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆக உள்ளன.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.