ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு.. வாண்ட்டடாக இறங்கி செய்த விஜய்.. “ அவர் கொடுத்த அன்புதான்” - சிவகார்த்திகேயன் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு.. வாண்ட்டடாக இறங்கி செய்த விஜய்.. “ அவர் கொடுத்த அன்புதான்” - சிவகார்த்திகேயன் பேச்சு!

ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு.. வாண்ட்டடாக இறங்கி செய்த விஜய்.. “ அவர் கொடுத்த அன்புதான்” - சிவகார்த்திகேயன் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 19, 2024 09:10 AM IST

‘கோட்’ படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த போது, அந்த காட்சியில் அவர் கொடுத்த துப்பாக்கி ஸ்பெஷலா இல்லை, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்ததற்காக அவர் கொடுத்த வாட்ச் ஸ்பெஷலா என்பதற்கு சிவகார்த்திகேயன் பதில் கொடுத்திருக்கிறார்.

ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு.. வாண்ட்டடாக இறங்கி செய்த விஜய்..  “ அவர் கொடுத்த அன்புதான்” - சிவகார்த்திகேயன் பேச்சு!
ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு.. வாண்ட்டடாக இறங்கி செய்த விஜய்.. “ அவர் கொடுத்த அன்புதான்” - சிவகார்த்திகேயன் பேச்சு!
கோட் திரைப்படத்தில் விஜயுடன் சிவா
கோட் திரைப்படத்தில் விஜயுடன் சிவா

இதற்கிடையே கோட் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் நடந்த அமரன் ஆடியோ வெளியீட்டு விழாவில், அவரிடம் கோட் படத்தின் போது விஜய் கொடுத்த துப்பாக்கி அல்லது வாட்ச் இதில் உங்களின் ஸ்பெஷல் எது என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘தளபதி கொடுத்த அன்பு ஸ்பெஷல்’ என்று பதிலளித்தார்.

ரஜினி கொடுக்க மறுத்த வாய்ப்பு

முன்னதாக, ஜெயிலர் திரைப்படத்தில், இயக்குநர் நெல்சன் ரஜினியின் மகனாக முதலில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க விருப்பப்பட்டதாகவும், ஆனால் ரஜினி அப்படி நடிக்க வைத்தால், சிவகார்த்திகேயன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஆகி விடும் என்பதால் அதனை மறுத்ததாகவும் கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் (ராஜ்மகல் நிறுவனம் )

மேலும் அந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. அந்தப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தன. அப்போது சிவகார்த்திகேயன் அவ்வளவுதான்.. இனி காலி என்றெல்லாம் பேசினார்கள். அந்த சமயத்தில்தான் தீபாவளி கெட் டு கெதருக்காக என்னுடைய நண்பர் அழைத்தார் என்று நான் சென்று இருந்தேன்.

அஜித்
அஜித்

அவர் எனக்கு சீனியராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது, நீங்கள் அப்படி செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்து விட்டு, சென்று இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் பேசியதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு விமர்சனம் நம் மீது வைக்கப்பட்டால், முதலில் அதற்குள் இருக்கும் அர்த்ததை பார்க்க வேண்டும் என்பதுதான். படம் சரியாக இல்லை என்று விமர்சனம் செய்தால், படத்தை சரியாக கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். ஆனால், நம்மையே காலி.. என்று விமர்சனம் வருகிறது என்றால், அதை நம்ப கூடாது. அதை நான் அன்றைக்குதான் புரிந்து கொண்டேன்.” என்று பேசினார்.

கதவை திறந்தால் அஜித் சார்

கதவை திறந்து உள்ளே நுழைந்து பார்த்தால், அங்கு தல அஜித் சார் இருந்தார். அவர் என்னை பார்த்து கை கொடுத்து ‘welcome to the big league’ ( பெரிய பயணத்திற்கு வரவேற்கிறேன்) என்று கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அப்படியே சாரை பார்த்துக்கொண்டு இருந்தேன். உடனே அவர், உங்களை வளர்ச்சியைப் பார்த்து நிறைய பேர் பாதுகாப்பற்றது போல உணர்கிறார்கள் என்றால், நீங்கள் பெரிய பயணத்திற்குள் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். வெல்கம் என்றார்.

அவர் எனக்கு சீனியராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது, நீங்கள் அப்படி செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்து விட்டு, சென்று இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் பேசியதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு விமர்சனம் நம் மீது வைக்கப்பட்டால், முதலில் அதற்குள் இருக்கும் அர்த்ததை பார்க்க வேண்டும் என்பதுதான். படம் சரியாக இல்லை என்று விமர்சனம் செய்தால், படத்தை சரியாக கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். ஆனால், நம்மையே காலி.. என்று விமர்சனம் வருகிறது என்றால், அதை நம்ப கூடாது. அதை நான் அன்றைக்குதான் புரிந்து கொண்டேன்.” என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.