‘திருச்செந்தூர் முருகனே பார்த்தாலே; அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை; அறுபடை வீட்டையும் ஒரே நேரத்துல’-சிவகார்த்திகேயன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘திருச்செந்தூர் முருகனே பார்த்தாலே; அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை; அறுபடை வீட்டையும் ஒரே நேரத்துல’-சிவகார்த்திகேயன்!

‘திருச்செந்தூர் முருகனே பார்த்தாலே; அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை; அறுபடை வீட்டையும் ஒரே நேரத்துல’-சிவகார்த்திகேயன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2025 04:40 PM IST

அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்காகத்தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறேன். அடுத்ததாக பழநி, திருப்பறங்குன்றம் என வரிசையாக செல்ல வேண்டி இருக்கிறது. - சிவகார்த்திகேயன்!

‘திருச்செந்தூர் முருகனே பார்த்தாலே; அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை; அறுபடை வீட்டையும் ஒரே நேரத்துல’-சிவகார்த்திகேயன்!
‘திருச்செந்தூர் முருகனே பார்த்தாலே; அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை; அறுபடை வீட்டையும் ஒரே நேரத்துல’-சிவகார்த்திகேயன்!

அவர் பேசும் போது, ‘எப்போது திருச்செந்தூருக்கு வந்தாலும் மிக மிக பாசிட்டிவாக நான் உணர்வேன். அமரன் படத்தின் வெற்றிக்கு முருகனுக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை இருந்தது. அதன் கூடவே இன்னும் சில வேண்டுதல்களும் இருந்தன. மிக முன்பே நான் வந்திருக்க வேண்டும்; ஆனால், வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக, நான் வராமல் இருந்தேன்.

 

அறுபடை வீட்டையும்

அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்காகத்தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறேன். அடுத்ததாக பழநி, திருப்பறங்குன்றம் என வரிசையாக செல்ல வேண்டி இருக்கிறது. இங்கே, எல்லாமும் மிக திருப்தியாக நடந்து முடிந்திருக்கின்றன. கோயில் நிர்வாகத்திற்கு என்னுடைய நன்றி.’ என்றார்.

இதையடுத்து அண்மையில் அவரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து கேட்கப்பட்டது; அப்போது முதலில் அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த சிவகார்த்திகேயன், ‘நான் சாமி கும்பிட வந்திருக்கிறேன் அதைப்பற்றி இங்கு பேச வேண்டாம்; அதைப் பற்றி பேசுவதற்கு வேறு ஒரு இடம் கிடைக்கும்; அப்போது நான் அங்கு பேசுகிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக் கூடாது என்பதுதான் எல்லோருடைய நோக்கமும். காவல்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருப்பினும் நாம் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும். அவர்களுக்கு முழு தைரியம் இருக்க வேண்டும். இனிமேல் இதுபோல நடக்காது என்று நாம் நம்புவோம்.’ என்று பேசினார்.

முன்னதாக, நேசிப்பாயா நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன், 'எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் சார் தான். பிரிட்டோ சார் மிக நல்ல மனிதர். என்னோட மருமகனும், மருமகளும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; நீங்கள்கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கேட்டார்.

மாமனார் மிகவும் ஸ்பெஷல்

நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். ஆகையால், அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பா முரளிக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்.

என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது எனக்கு ஒரு எபிசோட் ஆங்கிரிங் செய்தால், 4000 முதல் 4500 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். ஆனாலும் அவர் அவரது பெண்ணை எனக்கு கல்யாணம் செய்து கொடுத்தார்.

43 வயதிலேயே மாரடைப்பு

அவருக்கு 43 வயதிலேயே மாரடைப்பு வந்து விட்டது; என்னுடைய அப்பா இறந்த நேரம் அது! அவருக்கும் இரண்டு பெண்கள் இருந்தார்கள்; எங்களைப் பார்த்துக்கொள்வதற்காகவே அவர் வேலையை விட்டார்; படித்திருக்கிறாய் வேலைக்குச் சென்று நன்றாக சம்பளம் வாங்கு என்று அவர் என்னிடம் சொல்ல வில்லை; மாறாக உன்னுடைய கனவை நோக்கி ஓடு என்று உத்வேகப்படுத்தினார்; அவர் பெயர் மனோகர்.

அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் சார் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு சார் இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.

யுவன் சார் GOAT.

ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால், முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் சார் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கெரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் சார். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.