Sivakarthikeyan: 'நீ நடந்தால் நடையழகு..' - இவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிட்டாரா சிவகார்த்திகேயனின் மகன்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: 'நீ நடந்தால் நடையழகு..' - இவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிட்டாரா சிவகார்த்திகேயனின் மகன்?

Sivakarthikeyan: 'நீ நடந்தால் நடையழகு..' - இவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிட்டாரா சிவகார்த்திகேயனின் மகன்?

Aarthi V HT Tamil
Jun 20, 2023 12:11 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

சிவகார்த்திகேயன் மகன்
சிவகார்த்திகேயன் மகன்

இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டு ஆராதனா என்ற மகள் பிறந்தார். இவர் கனா படத்தில் தனது தந்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடல் பாடினார். இதனையடுத்து  2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு குகன் என்ற மகனும் பிறந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகனின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், ' நீ நடந்தால் நடை அழகு ' என தலைப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளைக் குவித்து வருகிறது. அத்துடன் சிவகார்த்திகேயன் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா என ரசிகர்கள் வாய்ப்பிளந்து உள்ளனர்.

சிவகார்த்திகேயன் தனது அடுத்த திரையரங்கு வெளியீட்டான ' மாவீரன் படத்திற்கு தயாராக உள்ளார். ஜூலை 14 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 மாவீரன் படத்தில் முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் பாடிய இரண்டாவது சிங்கிள் டிராக்கான 'வண்ணாரப்பேட்டையில'  என்ற பாடலை பாடினார். பரத் ஷங்கர் இசையமைத்த காதல் பாடலை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.