SK 21 Update: ‘அதகளம் போங்க..’ ; SK21 டீசரை பார்த்து நெல்சன் போட்ட பதிவு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான அயலான் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்த படங்களின் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த போதே, தன்னுடைய 21 வது படத்தில் கமிட் ஆனார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவவீரராக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் லல்லுவும், ராகுல் போஸூம் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “ வாவ்... இப்போதுதான் எஸ் கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்தேன். முழுக்க முழுக்க அதகளமாக இருக்கிறது. உணர்ச்சிபூர்வமான இந்த கதையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் ராஜ்குமார் பெரியசாமி. மொத்த குழுவுக்கும் என்னுடைய பெரிய பாராட்டுகள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
நெல்சனிடம் உதவி இயக்குநராக வேலை செய்த சிவகார்த்திகேயன், அவர் டைரக்ட் செய்த பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வேலை செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே உள்ள நட்பின் இலக்கணமாகவே இருவரும் டாக்டர் திரைப்படத்தில் இணைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்