Sivakarthikeyan: அழகான க்யூட் குடும்பம்.. பொங்கல் வாழ்த்துடன் சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்தகேயன்
Sivakarthikeyan: அழகான தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பொங்கலுக்கு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தனது இளைய மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்து
மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் தாஸ் ஆகியோருடன் தனது இளைய மகன் பவன் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் தனது பதிவில், "உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏 பொங்கலோ பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் எக்ஸ் பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் மூன்றாவது மகன் பவன்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பவன் பிறந்தார். பவன் பெயர் சூட்டு விழாவின் விடியோவை பகிர்ந்திருந்த சிவகார்த்திகேயன் அவரது முகத்தை வெளிக்காட்டாமலே இருந்து வந்தார். அத்துடன் அந்த விடியோவில் பிரசவத்தின் போது மனைவி பட்ட கஷ்டங்களை நினைத்து உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
இதையடுத்து பவன் பிறந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், அவரது புகைப்படத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, ஆர்த்தியின் பிரசவம் குறித்த பேசிய சிவகார்த்திகேயன், "ஆர்த்தி, ஆபரேஷன் தியேட்டரில் குழந்தை பெற்றெடுக்கும் போது நீ அனுபவதித்த நரகத்தை என் கண்களால் பார்த்தேன். அந்த வலியை தாங்கி எனக்கு அழகான உலகத்தை கொடுத்திருக்கிறாய். நான் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். லவ் யூ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடியோவின் முடிவில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தனக்கு பிறந்திருக்கும் மூன்றாவது குழந்தையின் பெயர் பவன் என்று வெளிப்படுத்தியிருப்பார்.
சிவகார்த்திகேயன் தனது உறவினர் பெண்ணான ஆர்த்தியை கடந்த 2010இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2013இல் ஆராதானா பிறந்தார். இதைத்தொடர்ந்து 2021இல் இரண்டாவது மகனான தாஸ் பிறந்தார். தற்போது பிறந்திருக்கும் மூன்றாவது குழந்தையான குகன் ஆறு மாத குழந்தையாக உள்ளார்.
சிவகார்த்திகேயன் படங்கள்
சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. அவரது நடிப்பில் அயலான், அமரன் என இரண்டு படங்கள் வெளியாகின. இவை இரண்டும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதில் அமரன் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட்டானது.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25வது படமாக எஸ்கே 25 உருவாகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். இந்த இரு படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்