தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sivakarthikeyan Puts New Condition To Good Night Movie Director

Sivakarthikeyan: ‘இது எல்லாமே வேணும்..’ - பட இயக்குநருக்கு கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன்

Aarthi Balaji HT Tamil
Mar 14, 2024 09:43 AM IST

Sivakarthikeyan condition: நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஒருவருக்கு கதையில் தனக்கு சில கண்டிஷன் இருக்கிறது அது போல் எழுத வேண்டும் என கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதைத் தொடர்ந்து இயக்குநர் எழிலின் மனங்கொத்தி பறவை படம் மூலமாக இரண்டாவது வெற்றியை ருசித்து பார்த்தார். 2013 ஆம் ஆண்டு மீண்டும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் பட்டைமுருகன் கதாபாத்திரம் மூலம் ஹிட் கொடுத்தார். இவரது படங்களுக்கு பெரியவர்களை விட சிறுவர்கள் அதிக அளவில் ரசிகர்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன் தற்போது SK 23 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று ( மார்ச் 13) SK 23 படத்தின் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். படகுழுவினருக்கு சுவையான மதிய விருந்து பரிமாறப்பட்டது.

இதனிடையே சமீப காலமாக தமிழ் சினிமாவில் குறைவான பட்ஜெட்டில் வரும் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டாகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் படம் செம ஹிட்டானது. அந்த படம் வெளியான சமயத்தில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் சிவகார்த்திகேயன். மேலும் இதை போல ஒரு பீல் குட்டான திரைப்படத்தை தனக்கும் தயார் செய்ய சொய்து கொடுக்குமாறு சொல்லியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அந்த படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் சொன்ன படி இந்த படத்தின் கதை எழுதும் பணியை விநாயக் சந்திரசேகரன் தொடங்கிவிட்டார்.

ஆனால் கதையில் தனக்கு சில கண்டிஷன் இருக்கிறது அது போல் எழுத வேண்டும் என கண்டிஷன் போட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனக்கு நடனம் ஆட பாடல்கள் வேண்டும் எனவே பாடல்கள் இருப்பது போல எழுதுங்கள் என்றும் கூறி கண்டிஷன் போட்டுள்ளாராம். சிவகார்த்திகேயன் கேட்டு கொண்ட படியே பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் தற்போது கதையை தயார் செய்து வருகிறாராம். கதை எழுதி முழுவதுமாக முடித்தவுடன் தான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

எஸ்கே 21 படத்திற்கு அமரன் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்க உள்ளார். கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலீம்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே படத்திற்கு என ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட பட்ஜெட் அதிகமாகிவிட்டது. இதனால் செலவை குறைக்க கமல் ஹாசன் அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நினைத்தை விட பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசன் அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் சொல்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்