தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: ‘காலச்சக்கரம் பொல்லாதது சார்’; ‘காதல்’ பரத் படத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan: ‘காலச்சக்கரம் பொல்லாதது சார்’; ‘காதல்’ பரத் படத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 08, 2024 04:02 PM IST

Sivakarthikeyan: பரத் திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

Sivakarthikeyan: ‘காலச்சக்கரம் பொல்லாதது சார்’; ‘காதல்’ பரத் படத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan: ‘காலச்சக்கரம் பொல்லாதது சார்’; ‘காதல்’ பரத் படத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன் 

இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா, ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார், ஐங்கரன் இன்டர்நேஷனல் கருணா மூர்த்தி, சோல்ஜர் ஃபேக்டரி சினிஷ், லார்க் ஸ்டுடியோஸ் குமார், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண் உள்ளிட்டோரும், ஆருத்ரா பிலிம்ஸ் அரவிந்த், 'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே. கல்யாண், 'டார்க்' பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்டோரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் மாற்றம் இருக்கிறதா? இல்லையா? 

'காளிதாஸ்' படத்தின் முதல் பாகத்தை எடுத்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் வேலே, இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார். இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி. எஸ். இசையமைக்கிறார். 

துரைராஜ் கலை இயக்கத்தையும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார். இந்த திரைப்படத்தை, ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில், பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

வெற்றி வசப்படும் என நம்பிக்கை 

இவர் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற 'பார்க்கிங்', 'கருடன்', 'மகாராஜா' ஆகிய திரைப்படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் 'காளிதாஸ் 2' படம் உருவாகுவதால்.. இந்த திரைப்பட குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும், திரை ஆர்வலர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் ஏற்பட்டு இருக்கிறது. 

படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.