அப்பாவிற்கும் அமரனிற்கும் ஒத்துப்போனது! அமரன் வெற்றி விழாவில் கலங்கிய சிவகார்த்திகேயன்!
ரூ.100 கோடியைக் கடந்து வசூலை குவித்து வரும் அமரன் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார்.

கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படாமனது இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. இப்படத்தில் சாய் பல்லவி நடித்து இருந்தார். மேலும் இப்படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து இருந்தார். ரூ.100 கோடியைக் கடந்து வசூலை குவித்து வரும் அமரன் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார்.
சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி பேசுகையில், ‘எனக்கு படம் வெளியானதுக்கு பிறகு மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். ரொம்ப ரேராக தான் இந்த மாதிரி ஒரு படம் நம்மால் பண்ண முடியும். ராணுவத்தில் பணிபுரியவர்கள் எங்கள் வாழ்க்கை தொடர்பாக ஒரு படம் வந்துள்ளது என்று நினைத்து உண்மையில் ரொம்ப சந்தோஷப்படுவார்கள் . இது போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் . அதுவும் இந்து கதாபாத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குனர் ராஜ்குமார் சாருக்கு நன்றி’ எனத் தெரிவித்தார்.
கலங்கிய சிவகார்த்திகேயன்
தொடர்ந்து பேசிய சிவாகார்த்திகேயன், "Team work is dream work னு சொல்லுவாங்க எல்லோரும் ஒரு 100% கொடுக்கும் பொழுது அது என்ன மேஜிக் நிகழ்த்தும் அப்படி என்பதுதான் இந்த அமரன். நான் எப்போதும் சொல்கிறது தான் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இந்த உலகத்திற்கு ஏராளம். அன்பே சிவம் இது கமல் சார் உடைய டயலாக் இதுதான் இந்த படத்திற்கு நான் ஒப்பந்தம் செய்யும்போது என்னுடைய நினைவில் இருந்தது. அந்த வரி இன்னவோ மாறவில்லை நான் எப்ப எல்லாம் அமரன் பற்றி யோசித்தால் அந்த வரிகள் மாறாது.