‘43 வயசுல மாரடைப்பு;4500 ரூ வாங்குனவன நம்பி பொண்ணு கொடுத்தார்; எங்களுக்காக வேலைய விட்டு அவர் பட்ட’-சிவகார்த்திகேயன்
என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார்; அப்போது எனக்கு ஒரு எபிசோட் ஆங்கிரிங் செய்தால், 4000 முதல் 4500 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். -சிவகார்த்திகேயன் உருக்கம்!
நடிகர் சிவகார்த்திகேயன், 'எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் சார் தான். பிரிட்டோ சார் மிக நல்ல மனிதர். என்னோட மருமகனும், மருமகளும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; நீங்கள்கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கேட்டார்.
மாமனார் மிகவும் ஸ்பெஷல்
நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். ஆகையால், அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பா முரளிக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்.
என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது எனக்கு ஒரு எபிசோட் ஆங்கிரிங் செய்தால், 4000 முதல் 4500 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். ஆனாலும் அவர் அவரது பெண்ணை எனக்கு கல்யாணம் செய்து கொடுத்தார்.
43 வயதிலேயே மாரடைப்பு
அவருக்கு 43 வயதிலேயே மாரடைப்பு வந்து விட்டது; என்னுடைய அப்பா இறந்த நேரம் அது! அவருக்கும் இரண்டு பெண்கள் இருந்தார்கள்; எங்களைப் பார்த்துக்கொள்வதற்காகவே அவர் வேலையை விட்டார்; படித்திருக்கிறாய் வேலைக்குச் சென்று நன்றாக சம்பளம் வாங்கு என்று அவர் என்னிடம் சொல்ல வில்லை; மாறாக உன்னுடைய கனவை நோக்கி ஓடு என்று உத்வேகப்படுத்தினார்; அவர் பெயர் மனோகர்.
அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் சார் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு சார் இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.
யுவன் சார் GOAT.
ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால், முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் சார் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கெரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் சார். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்