Sivakarthikeyan: பரபரப்பில் ‘பராசக்தி’ .. ‘ஹாப்பி பர்த்டே ஹீரோ’- சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா!
Sivakarthikeyan: ‘ஹாப்பி பர்த்டே ஹீரோ’. உங்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு மகிழ்ச்சி. இறுதியாக, இந்தப்பயணமும், ஒத்துழைப்புமே..’ - சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா!

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்திருக்கும் இயக்குநர் சுதாகொங்கரா அவருக்கு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
அவ்வளவு மகிழ்ச்சி
அதில் அவர், ‘ஹாப்பி பர்த்டே ஹீரோ’. உங்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு மகிழ்ச்சி. இறுதியாக, இந்தப்பயணமும், ஒத்துழைப்புமே தொடர்ந்து சினிமா உருவாக்கும் எண்ணைத்தை கொடுத்திருக்கிறது.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா இணையும் படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டீசரும் இன்று வெளியிடப்பட்டது.
இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்திற்கு சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படத்தின் டைட்டில் வைத்ததிற்கு சிவாஜி பேரவையும், ‘பராசக்தி’ படத்தின் நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக, சூரரைப்போற்று திரைப்படத்தை கொடுத்து, சரிந்து கிடந்த சூர்யாவின் மார்க்கெட்டை மறுபடியும் தூக்கி நிறுத்திய இயக்குநர் சுதா கொங்கரா , புறநானூறு படத்தில் மீண்டும் அவருடன் இணைந்தார். ஆனால், அந்தப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அந்தப்படம் தொடர்பாக வெளியான அறிக்கையில், படம் தள்ளிப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப்படம்தான் தற்போது ‘பராசக்தி’ படமாக உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புறநானூறு படம் நடக்குமா?
இந்த நிலையில், அந்தப்படம் குறித்து சுதா கொங்கரா, கடந்த வருடம் சினி உலகம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், புறநானூறு படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால், அந்த படம் நடக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அந்த படம் நடக்கும்.
உண்மையில் எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வது என்னவென்றால், அந்த படத்தை நீ எப்போது வேண்டுமென்றாலும் எடு, ஆனால் எடு என்பதுதான். காரணம் என்னவென்றால், அந்த படம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம்.
50 மடங்கு
அந்தப் படத்தின் கருவானது எனக்கு எப்படியானது என்றால், நான் இயக்கிய இறுதிச்சுற்று படத்தை விட 100 மடங்கும், சூரரைப் போற்று திரைப்படத்தை விட 50 மடங்கும் நான் ஆசைப்படுகிற, என்னை சொல்லத்தூண்டுகிற கருவாகும். அந்த அளவுக்கு அந்த படம் எனது மனதிற்கு மிக மிக நெருக்கமானது. அந்தக்கதையில் நான் சொல்ல நினைப்பதுதான் என்னுடைய அரசியல்.
அதுதான் என்னுடைய கருத்தியல். அது ஒடுக்கு முறைக்கு எதிரான திரைப்படம். அதனால் தான் அந்த திரைப்படம் என்னுடைய மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருக்கிறது. அதைத்தான் நான் என்னுடைய திரைப்படங்களில் பேச நினைக்கிறேன். ஒடுக்கு முறைக்கு எதிரான பல்வேறு விஷயங்கள், நம்ம சுற்றி நடக்கின்றது. ஆகையால் அதைப் பற்றி நாம் பேசி தான் ஆக வேண்டும். நான் பேசுவேன்.’ என்று அதில் (சினி உலகம்) பேசி இருந்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்