தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பா! அன்பையும் ஆசியையும் தருமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை

Sivakarthikeyan: மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பா! அன்பையும் ஆசியையும் தருமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 03, 2024 06:42 PM IST

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இது உண்மையாகும் விதமாக மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். மூன்றாவது குழந்தைக்கும் ரசிகர்கள் அன்பையும் ஆசியையும் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்
மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது குழந்தை பெற்றெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் குழந்தை பிறக்க இருப்பது குறித்த தகவல் தீயாய் பரவின.

ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஜூன் 2ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில், #BlessedWithBabyBoy என்ற ஹேஷ் டாக்குடன், "எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவுக்கும் (மகள்), குகனுக்கும் (முதல் மகன்) நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளிப்படுத்திய பின்னர் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டிவி பிரபலம் டூ டாப் ஹீரோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற காமெடி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் காமெடியான அறிமுகமான சிவகார்த்திகேயன் பின்னர் மெரினா படம் மூலம் ஹீரோவானார். 

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். 

சிவகார்த்திகேயன் மகளான ஆராதனா, அவர் தயாரித்த கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருப்பார். இதன் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்த நிலையில், குகன் தாஸ் என பெயர் வைத்தார். தற்போது மீண்டும் ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அதன் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார். இந்த ராணுவத்தில் இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இதுதவிர ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது SK 23 என்ற அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அவரது ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டில் பொங்கல் ரிலீஸாக அயலான் வெளியானது. படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அத்துடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தி அடமண்ட் கேர்ள், குரங்கு பெடல் ஆகிய படங்கள் வெளியாகி விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்