Sivakarthikeyan: சிவா - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு! - பரபரக்கும் கோலிவுட்!
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்திற்கு ‘மதராஸி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், வித்யூத் ஜம்வால் வில்லனாக கமிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
புதிய சிவகார்த்திகேயன்
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுவென நடைபெற்று வருகின்றன. ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார். இந்தப்படம் நடந்து கொண்டிருக்கும் போதே, சுதாகொங்கரா இயக்கும் படத்திலும் கமிட் ஆனார்.
சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில், நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
SK25 என்ற அழைக்கப்படும் இந்த படத்துக்கு சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ படத்தின் டைட்டிலை வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் இந்தப்படம் மிகப்பெரும் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்