"இதுதான் இந்தியன் ஆர்மி முகம்"..மேஜர் ஏற்படுத்திய தாக்கத்தால் எகிறும் வசூல்.. 27ம் நாள் கலெக்ஷன் எவ்வளவு?
அமரன் படம் மக்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தால் படம் வெளியாகி 27 நாட்கள் ஆன போதிலும் படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர்.

"இதுதான் இந்தியன் ஆர்மி முகம்"..மேஜர் ஏற்படுத்திய தாக்கத்தால் எகிறும் வசூல்.. 27ம் நாள் கலெக்ஷன் எவ்வளவு?
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலைக் கடந்து சாதித்த நிலையில், தற்போது வெற்றிகரமாக திரையில் 25 நாட்களை நிறைவு செய்து அடுத்த சாதனை செய்துள்ளது.
அமரன் திரைப்படத்திற்கு வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்த நடிகர்கள்
அமரன் திரைப்படம் வெளியான சமயத்தில், மக்கள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பையும், சாய் பல்லவியின் நடிப்பையும் புகழ்ந்து தள்ளினர். குறிப்பாக சாய் பல்லவி தன் முகத்தில் காட்டிய உணர்ச்சிகள் மூலம் அவர் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி இருக்கிறார் என பலரும் கூறி வந்தனர்.