54 Years of Sivandha Mann: முதல் முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம்! எம்ஜிஆருக்கான கதையில் சிவாஜி கணேசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  54 Years Of Sivandha Mann: முதல் முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம்! எம்ஜிஆருக்கான கதையில் சிவாஜி கணேசன்

54 Years of Sivandha Mann: முதல் முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம்! எம்ஜிஆருக்கான கதையில் சிவாஜி கணேசன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 09, 2023 05:52 AM IST

எம்ஜிஆர் பட ஸ்டைலில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் என நடிகர் திலகம் சிவாஜி கணசன் இந்தப் படத்தில் மிரட்டியிருப்பார். அத்துடன் முதல் முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படம் என்ற பெருமையும் சிவந்த மண் பெற்றது.

சிவந்த மண் படத்தில் சிவாஜி கணேசன் - காஞ்சனா
சிவந்த மண் படத்தில் சிவாஜி கணேசன் - காஞ்சனா

படத்தில் சிவாஜி கணேசன் புரட்சியாளனாகவும், அவருக்கு ஜோடியாக ராணி வேடத்தில் காஞ்சனாவும் நடித்திருப்பார்கள். சிவாஜியின் நண்பராக முக்கிய வேடத்தில் முத்துராமன் நடித்திருப்பார். வில்லனமாக எம்என் நம்பியார் வழக்கம்போல் தனது மிரட்டலான நடிப்பில் முத்திரை பதித்திருப்பார். நாகேஷ், எஸ்வி ரங்காராவ், தேங்காய் சீனிவாசன், சச்சு உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

தமிழ்நாட்டின் பகுதியாக இருக்கும் வசந்தபுரி பகுதியை போர்த்துகீசிய காலனியர்களுக்கு விலை பேச நினைக்கும் நம்பியாரின் சூழ்ச்சியை சிவாஜி கணேசன் முறியடிப்பதே படத்தின் ஒன்லைன். சுருக்கமாக சொன்னால் தனது தாய்மண் மீது பற்றி கொண்ட ஹீரோ அதை அந்நியர்களிடமிருந்து காப்பாற்றும் கதை தான். நன்கு பழக்கப்பட்ட இந்த கதைக்கு இயக்குநர் ஸ்ரீதரின் திரைக்கதையும், மேக்கிங்கும் படத்தை தனி நித்துவமாக காட்டின.

வெளிநாடுகளில் முதலில் படமாக்கப்பட்ட தமிழ் படமாக அமைந்த சிவந்த மண் ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற பகுதிகளிலும், ஆல்ப்ஸ் மலைத்தொடர்களிலும் வைத்த படமாக்கினார். அத்துடன் கலர் படமாக இது அமைந்திருந்தது. ஐரோப்பிய நாடுகளின் குளுமையான காட்சிகள் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் விதமாக இருந்தன. குறிப்பாக புராதான சின்னங்கள், ஸ்பெயின் நடைபெறும் எருது சண்டை, ஈபிள் டவர் முன்னிலை சிவாஜி - காஞ்சனா டூயட் என பல சர்ப்ரைஸான காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இத்தோடு இல்லாமல் படத்துக்காக வாஹினி ஸ்டுடியோஸில் ஆறு அருகே ரெஸ்ட்ராண்ட் மற்றும் பார் இருப்பது போல் பிரமாண்ட் செட்டும் போடப்பட்டது. படத்துக்கான மிரட்டலான ரயில் விபத்து சண்டை காட்சியின் சீன் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் படமாக்கினார்கள்.

படத்துக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுத எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ஒரு ராஜா ராணியிடம், பார்வை யுவராணி, பட்டத்து ராணி போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. ஒரு ராஜா ராணியிடம் சிறந்த கிளாசிக் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. பட்டத்து ராணி பாடல் பெர்சியன் ஸ்டைல் இசையமைப்பும், காட்சியமைப்பும் ரசிகர்களை சீட் நுணிக்கு வரவைத்தன.

எம்ஜிஆர் கதையில் சிவாஜி கணேசன் நடித்து தீபாவளி வெளியீடாக நவம்பர் 9, 1969இல் இந்தப் படம் வெளியாகி பாகிஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இயக்குநர் ஸ்ரீதரின் முதல் ஆக்‌ஷன் படமான இது சிவாஜி கணேசன் சினிமா வாழ்க்கையிலும் முக்கிய படமாக அமைந்தது. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை பின்னர் இந்தியிலும் இயக்குநர் ஸ்ரீதரே உருவாக்கினார். சிவாஜி கணேசன் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த சிவந்த மண் வெளியாகி இன்றுடன் 54 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.