Tamil News  /  Entertainment  /  Sivaji Ganesan And Savitri's Pasamalar Movie Completes 62 Years Of Its Release On May 27
பாசமலர்
பாசமலர்

62 Years of Pasamalar: 62 ஆண்டுகள் கடந்தும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வாசம் வீசும் 'பாசமலர்'

27 May 2023, 5:15 ISTKarthikeyan S
27 May 2023, 5:15 IST

62 Years of Pasamalar: சிவாஜி கணேசன் - சாவித்ரி நடிப்பில் வெளியான 'பாசமலர்' திரைப்படம் ரலீஸாகி இன்றோடு (மே 27) 62 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.

தமிழ் சமூகத்தை பொறுத்தவரை உறவுகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. அது சினிமாவானலும் சரி நிஜ வாழ்க்கை ஆனாலும் சரி இன்று வரை அதற்கான முக்கியத்துவம் குறைந்தது கிடையாது. அந்த வகையில் அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக இன்றைக்கும் திகழ்கிறது 'பாசமலர்'. இதில் அண்ணன் கதாப்பாத்திரத்தில் சிவாஜி கணேசனும் தங்கை கதாப்பாத்திரத்தில் சாவித்திரியும் நடித்திருந்தார்கள். இவர்களின் சிறப்பான நடிப்பு இத்திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக ஆக்கியது.  இந்த திரைப்படத்தை பீம் சிங் இயக்கியிருந்தார்.

மேலும் ரசிகர்கள் பலரும் சிவாஜியையும் சாவித்திரியையும் சொந்த அண்ணன் தங்கையாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். 'பாசமலர்' திரைப்படத்தில் மட்டுமின்றி நேரிலும் மாப்பிள்ளை என ஜெமினி கணேசனை உரிமையுடன் அழைப்பது சிவாஜியின் வழக்கம். அதுவே தங்கையின் கணவராக பாசமலரிலும் நீடித்ததால் இயல்பாகவே காட்சிகள் அமைந்தன. அந்தக்காலத்தில் ‘வாராயோ தோழி வாராயோ…’ பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை. 

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். வெள்ளி விழா கொண்டாடிய பாசமலர் திரைப்படத்துக்கு வசனம், எழுதி தமிழ் திரையுலக வரலாற்றில் இடம் பிடித்தார் ஆரூர் தாஸ். இந்த வெற்றிக்கு பிறகு ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களின் பாராட்டை பெற்றார்.

திரைப்படம் வெளியான பிறகு, வீடுகளில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரமான ‘ராதா’ என பெயர் வைத்தனர். அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றிருந்தது 'பாசமலர்'

தமிழகத்தில் ‘பாசமலர்’ திரையிட்ட பல திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘பாசமலர்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 62 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆம், 1961 ஆம் ஆண்டு இதே மே 27-ஆம் தேதிதான் ‘பாசமலர்’ வெளியிடப்பட்டது. தற்போது 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால், நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 62 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் இந்தத் திரைப்படமும் தமிழ் சினிமாவில் அழியாத ஒரு காவியம்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்