தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  62 Year Of Bale Pandiya: சிரிக்க வைத்த ஆள்மாறாட்ட கதை! 11 நாள் ஸ்டுடியோவை விட்டு வெளியேறாமல் சிவாஜி நடித்த படம்

62 Year Of Bale Pandiya: சிரிக்க வைத்த ஆள்மாறாட்ட கதை! 11 நாள் ஸ்டுடியோவை விட்டு வெளியேறாமல் சிவாஜி நடித்த படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 26, 2024 07:00 AM IST

ஒரே மாதத்தில் தயாராகி, வெளியாகி படம் என்ற சாதனை படைத்த படமாக சிவாஜி கணேசனின் பலே பாண்டியா உள்ளது. 11 நாள் ஸ்டுடியோவை விட்டு வெளியேறாமல் இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார்.

11 நாள் ஸ்டுடியோவை விட்டு வெளியேறாமல் சிவாஜி நடித்த பலே பாண்டியா
11 நாள் ஸ்டுடியோவை விட்டு வெளியேறாமல் சிவாஜி நடித்த பலே பாண்டியா

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது மே மாத தொடக்கத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கிய நிலையில், இதே மாதம் கடைசி வாரத்தில் படம் வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. மொத்தம் 11 நாள்களில் படமாக்கப்பட்டது இந்த படம். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் படம் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் மே 2ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிவாஜி கணேசன், படத்தின் ஷுட்டிங் முழுவதையும் முடித்துவிட்டு மே 12ஆம் தேதி ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்துள்ளாராம். அந்த வகையில் பார்க்கப்போனால் இதுவொரு உலக சாதனையாகவே கருதப்படுகிறது.

ஆள்மாறட்ட கதை

இந்த படத்தில் மூன்று வேடங்களில் சிவாஜி கணேசனும், இரண்டு வேடங்களில் எம்ஆர் ராதாவும் நடித்திருப்பார்கள். பணத்துக்காக கொலை செய்ய முயலும் கதாபாத்திரத்தில் ஒரு சிவாஜி, எம்ஆர் ராதா, மாமா - மாப்பிள்ளையாக இதே இணை மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். மூன்றாவது சிவாஜியின் கேரக்டர் படத்தில் டுவிஸ்ட் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக நடக்கும் ஆள்மாறாட்டம், கொலை முயற்சி, திடுக் திருப்பம் தான் படத்தின் ஒன்லைன். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநர் பிஆர் பந்தலு படத்தை இயக்கியிருப்பார்.

மா. ரா. மற்றும் ஜோஷி படத்தின் கதை உருவாக்க, தாதா மிராசி திரைக்கதை அமைத்திருப்பார். கொலைகாரராக வரும் கதாபாத்திரத்தில் சிவாஜி மெட்ராஸ் பாஷையில் புகுந்து விளையாடியிருப்பார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை காமெடியும், பிளாக் காமெடியும் கலந்து கட்டியிருக்கும்.

ஹீரோயினாகவும், சிவாஜியின் காதலியாகவும் தேவிகா நடித்திருப்பார். இரண்டாவது ஹீரோயினாக வசந்தி நடித்திருப்பார். இன்னும் பல கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் சிவாஜி - எம்ஆர் ராதா இணைந்து போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் ஆதிக்கம் செலுத்தியிருப்பார்கள்.

பாடல்கள் சூப்பர் ஹிட்

கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருப்பார்கள். அனைவராலும் ரசிக்ககூடிய சிறந்த கிளாசிக் பாடலான அத்திக் காய் காய், நீயே உனக்கு என்றும் நிகரானவன் (மாமா மாப்ளே), வாழ நினைத்தால் வாழலாம், ஆதி மனிதன் போன்ற பாடல்கள் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளன. இதில் ஆதி மனிதன் பாடலை தவிர மற்ற பாடல்களையெல்லாம் டி.எம். செளந்தரராஜன் தான் பாடியிருப்பார்.

அதேபோல் மாமா - மாப்ளே பாடல் படமாக்கப்பட்ட விதமும் ரசிக்கும்படியாக இருக்கும். 1990களில் டிவியில் அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாக இது உள்ளது.

ரசிகர்களை கவர்ந்த பலே பாண்டியா

குறுகிய நாளில் உருவாகி வெளியாகியிருந்தாலும், ரசிகர்களை இந்த படம் ஏமாற்றவில்லை. படத்தில் சிவாஜினியின் நடிப்புக்கும், எம்ஆர் ராதாவின் நடிப்புக்கும் விமர்சக ரீதியாக பாராட்டுகள் எழுந்தன. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டியதுடன் ஒரே மாதத்தில் தயாராகி சிவாஜிக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. கிளாசிக் படங்களில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய காமெடி படமான பலே பாண்டியா வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்