Tamil News  /  Entertainment  /  Sita Ramam Movie Deleted Scene Released
சீதா ராமம்
சீதா ராமம்

Sita Ramam Deleted Scene: சீதா ராமம் டெலிட்டெட் சீன் ரிலீஸ்

23 September 2022, 18:02 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 18:02 IST

சீதா ராமம் வெளியாகி 50 நாளான நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டு உள்ளது. 

நடிகர் துல்கர் சல்மான், மிருனால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதா ராமம். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

தேசப்பற்று, காதல், பிரிவு, சோகம், ஏமாற்றம் என அனைத்து கலந்த கலவையான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும், சீதா ராமம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களாகிறது. அதனைக்கொண்டாடும் விதமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது.

அந்தக் காட்சியில் துல்கர் சல்மானும் அவருடன் சிறைப்பட்டு இருக்கும் உயர் அதிகாரி கால் பந்து விளையாடுகின்றனர். அத்துடன் சண்டை போட்டு கொள்ளும் காட்சியும் இடம் பெற்று உள்ளது.

படம் வெளியாகி 50 நாளான் நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில், ”இந்த படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிய நிலையில் திரையரங்குகளில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட பெரிதாக என்ன நான் கேட்கப் போகிறேன்.

ஒரு கனவு நனவான தருணம் போல் இருக்கிறது. எனது படமான சுப் திரைப்படம் வெளியாகும் நாளான இன்று, சீதா ராமம் திரைப்படம் 50 வது நாள் கொண்டாட்டத்தை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டு இருந்தார்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்