தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Siruthai Siva Throwback Interview About Surya Bobby Deol Kanguva Movie

Siruthai Siva: ‘கங்குவன் என்பது மொழி.. ஆக்‌ஷன் ஃபேண்டஸி ஜானர்.. சூர்யா சார் ரொம்ப..’ - இயக்குநர் சிவா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 19, 2024 08:20 PM IST

கங்குவான் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

சிறுத்தை சிவா!
சிறுத்தை சிவா!

ட்ரெண்டிங் செய்திகள்

வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்நோக்கி காத்திருந்த சமயத்தில் டீசரானது, மாலை 6 மணிக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த நிலையில் தற்போது கங்குவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் குறித்து இயக்குநர் சிவா முன்னதாக பேசிய பேட்டியை இங்கு பார்க்கலாம்.

இது குறித்து அவர் பேசும் போது, “இது பிரமாண்டமாக இருக்கும்; சூர்யா இதில் பல தோற்றங்களில் வருவார்.

சூர்யா சாருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர்; ஒரு சிறந்த மனிதர்; அவருடன் வேலை பார்த்தது வசதியாக இருக்கிறது.

அவர் எங்களின் வேலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்த குழுவும் இந்த வாய்ப்பை எப்படியான ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இந்த கதையை நம்பி என்னுடைய விஷனை பெரிய திரையில் கொண்டு வர விரும்பி இருக்கிறார்கள்.” என்றார். 

இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கும் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். மேலும் அவர் தனக்கு இது தனித்துவமான அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். போஸ்டரில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கழுகு, டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வந்த நாய் மற்றும் குதிரை ஆகியவற்றுக்கு படத்தின் கதையில் சம்பந்தம் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்றார்

மேலும் பேசிய அவர், “கங்குவான் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

இதில் பீரியாடிக் சம்பந்தப்பட்ட காலமும், சமகாலம் என இரண்டும் கலந்து இருக்கும். நாங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்க விரும்புகிறோம். ஒரு கம்பீரமான மற்றும் மறக்கமுடியாத திரைப்படம் கொடுக்கும் அனுபவம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்