சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்

Marimuthu M HT Tamil
Nov 28, 2024 11:09 AM IST

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்
சிறகடிக்க ஆசை முத்துவுக்கு நிஜமாகவே இன்னிக்கு கல்யாணமாகிடுச்சு.. டிவி நடிகர் வெற்றி வசந்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம்

சினிமாவில் உடன் நடித்த நடிகைகளையே காதலித்து திருமணம் செய்துகொள்ளும் டிரெண்ட் இருக்கிறது. அதேபோல், சீரியலிலும் இந்த டிரெண்ட் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சீரியலில் நடித்துக்கொண்டிருந்த வெற்றி வசந்தும் வைஷ்ணவி சுந்தரும் நிஜமாகவே இன்று திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ தொடரில் முத்து என்ற கேரக்டரில் தோன்றி, தனது கலகலப்பான யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களைப் பெற்றவர், நடிகர் வெற்றி வசந்த். இவருக்கு சோசியல் மீடியாவில் நிறைய ரசிகர் பக்கமே உண்டு.

அதேபோல், விஜய் டிவியில் ’பொன்னி’ தொடரில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தவர், நடிகை வைஷ்ணவி சுந்தர். முன்னதாக, ராஜா ராணி 2 சீரியலில் சிறிய அளவிலான கேரக்டர் ரோலில் நடித்து வந்து, பொன்னி தொடரில் கதாநாயகி ஆகியிருக்கிறார்.

இந்த இரு பிரபல நடிகர் நடிகைகளும் நீண்டநாள்களாக காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்துள்ளனர். இதை நடிகர் வெற்றி வசந்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் உறுதிபடுத்தியிருக்கிறார். அதில், ‘’ வாழ்த்துகள் என்னுடைய பொண்டாட்டி. கடைசியாக நாம் இந்த திருமண நாளில் இணைந்து இருக்கிறோம். காத்திருந்திருக்கிறோம். லவ் யூ. இணைந்து மகிழ்ந்திருப்போம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம்

சீரியல் பிரபலங்களான வெற்றி வசந்த்துக்கும், வைஷ்ணவிக்கும் இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன், அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் இன்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

சீரியலில் அண்ணன்

வைஷ்ணவி சுந்தர் நடித்து வரும் பொன்னி சீரியலில் வெற்றி வசந்த் சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில் வைஷ்ணவியின் அண்ணனாக அவர் நடித்திருப்பார். சீரியலில் அண்ணனாக நடித்த இவர் தற்போது வைஷ்ணவியை கரம் பிடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த திருமணத்தில் பொன்னி சீரியல் நடிகர்களும், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களும் கலந்துகொண்டனர்.

புதிய சின்னத்திரை காதல் ஜோடி:

முன்னதாக தனது காதல் அறிவிப்பை இன்ஸ்டாவில் வெற்றி வசந்த் ஒரு கியூட் வீடியோ மூலம் உறுதி செய்தார். அதற்கான கேப்ஷனில், "என்றென்றும் பிரிந்திடாமல். இன்ஸ்டா குடும்பம் மற்றும் நண்பர்கள் இதைச்சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த வாரத்துக்குள் எங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. உங்கள் அனைத்து வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

இரண்டாவது மாத காதல் வாழ்த்துகள் மா. என்றென்றும் ஒன்றாக மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கி வாழ்வோம். லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆல்யா - சஞ்சீவ், ஸ்ரேயா - சித்து ஆகிய சின்னத்திரை ஜோடிகள், காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், நடிகர் வெற்றி வசந்தும், வைஷ்ணவி சுந்தரும் காதலித்து திருமணம் செய்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில், சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடித்து வந்த நடிகை ஸ்ரீகோபிகா, வருண்தேவ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.