Siragadikka Aasai: உண்மையை சொல்லும் பார்வதி?என்டரி கொடுத்த விஜயா? கடும் கோபத்தில் முத்து.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!
Siragadikka Aasai : விஜய் டிவியில் ஒலிபரப்பாகக்கூடிய சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

சுதாரித்துக் கொண்ட மனோஜ்
இன்றும் அந்த நகையை யார் மாற்றியது என்று முத்து மீனா இருவரும் தீவிரமாக கண்டுபிடிப்பதிலேயே இன்றைய எபிசோடும் நகர்கிறது. ஸ்ருதியை நகைக்கடை ஊழியராக பேச வைத்து மனோஜை உண்மையை சொல்ல வைக்கலாம் என பேசுகிறார். ஆனால் அவர் சுதாரித்துக் கொண்டு நான் எந்த நகையும் வாங்கவில்லை. ஸ்கேம் கால் செய்கிறீர்களா நான் போலீசில் புகார் கொடுப்பேன் என கூறி அந்த போன் காலை கட் செய்கிறார்.
இதனால் மீனா முத்து இருவரும் தான் செய்த பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என தெரிந்ததும் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். இதற்கிடையே ரவியோ இது பணம் சம்பந்தமான விஷயம் இதில் இவ்வாறு எதுவும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனை வரும் என முத்துவிடம் கூறுகிறார். இதற்கு முத்து இது என்னுடைய மனைவியின் நகை கண்டிப்பாக யார் இப்படி செய்தார் என கண்டுபிடிப்பேன். மனோஜ் தான் இதனை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் அதனை நான் கண்டுபிடிப்பேன் எனக்கூறி மனோஜ் ரெஸ்டாரண்டை விட்டு முத்து, மீனா இருவரும் கிளம்புகிறார்கள்.
முத்துவுக்கு இன்னொரு யோசனை
மனோஜ் உடனே வீட்டிற்கு சென்று விஜயாவிடம் தனக்கு வந்த கால் குறித்து சொல்கிறார். இதனை கேட்ட விஜயா ஷாக் ஆகி இது கண்டிப்பா முத்து வேலையா தான் இருக்கும் என சொல்கிறார். பின்னர் மனோஜிடம் சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணு நகையை மாற்றி வைத்துவிடலாம் என சொல்கிறார். நானும் அதற்கு தான் அம்மா ட்ரை பண்ணிட்டு இருக்கேன் கடையில் சரியா வியாபாரம் இல்லை என சொல்கிறார்.