Siragadikka Aasai : முத்துவை கைது செய்த போலீஸ்.. மனோஜின் கன்னத்தில் பளார் விட்ட காவலர்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siragadikka Aasai : முத்துவை கைது செய்த போலீஸ்.. மனோஜின் கன்னத்தில் பளார் விட்ட காவலர்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Siragadikka Aasai : முத்துவை கைது செய்த போலீஸ்.. மனோஜின் கன்னத்தில் பளார் விட்ட காவலர்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Divya Sekar HT Tamil
Jan 24, 2025 11:41 AM IST

Siragadikka Aasai : முத்துவுக்கு புது எதிரியாக இந்த போக்குவரத்து காவலர் என்ட்ரி கொடுக்கிறார். இவரால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப் போகிறது? கதை எந்த கோணத்தில் செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Siragadikka Aasai : முத்துவை கைது செய்த போலீஸ்.. மனோஜின் கன்னத்தில் பளார் விட்ட காவலர்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!
Siragadikka Aasai : முத்துவை கைது செய்த போலீஸ்.. மனோஜின் கன்னத்தில் பளார் விட்ட காவலர்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

ரோகிணி வித்யா வீட்டில் இருக்கிறார். அப்பொழுது ரோகிணின் அம்மாவும் அங்கே இருக்கிறார். ரோகிணி இடம் எதற்கு அப்பாவின் புகைப்படத்தை கேட்டாய் என கேட்க, அதற்கு இதனை நான் என் வீட்டில் இதுதான் என்னுடைய அப்பா என காட்டப் போகிறேன் என ரோகினி சொல்கிறார். முத்துவும் மீனாவும் மலேசியா போய் அங்கு என் அப்பாவை சந்தித்து பேசுவதாக கூறுகிறார்கள். அது மட்டும் அல்ல கூடவே என் அத்தையும், மாமாவையும் அழைத்து செல்வதாக கூறுகிறார்கள். எனவே தான் நான் என் மலேசியா அப்பா இறந்து விட்டதாக சொல்லி விட்டேன். இப்பொழுது இந்த போட்டோவை நான் அங்கு எடுத்துச் சென்றாள் அனைவரும் நம்பி விடுவார்கள் என கூறுகிறார்.

நீ சீக்கிரமாகவே குழந்தையை பெத்துக்கோ

இதனைக் கேட்ட ரோகிணியின் அம்மா இன்னும் எத்தனை பொய் தான் டி சொல்லுவ என கேட்க அதற்கு ரோகிணியின் தோழி வித்தியா நக்கலாக பதில் சொல்கிறார். ஏற்கனவே நீ சொன்ன பொய்யால் உன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயத்தில் நான் இருக்கிறேன். இப்படி அடுக்கிக் கொண்டே போனால் உன் வாழ்க்கை என்னாவது. எனக்கு வேற வழி தெரியவில்லை. இந்த போட்டோவை என் வீட்டிற்கு நான் கொண்டு போனால் அவர்கள் நம்பி விடுவார்கள். இந்த பிரச்சனையில் இருந்து எனக்கு கொஞ்சம் விடுதலை கிடைக்கும் என ரோகிணி பேசுகிறார்.

பின்னர் ரோகினிடம் நீ சீக்கிரமாகவே குழந்தையை பெத்துக்கோ அதுதான் உன் வாழ்க்கைக்கு கை கொடுக்கும். உன் வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாள் தான் இந்த பொய்யை நீ சொல்லிக் கொண்டிருப்பாய். சீக்கிரம் வீட்டில் உண்மையை சொல்லிவிடு என ரோகிணியின் அம்மா கூற ரோகிணி கோபமடைந்து முழு உண்மை தெரிந்தால் அவர்கள் அந்த வீட்டில் என்னை வாழ விடுவார்களா? நான் சந்தோஷமாக இருக்கக் கூடாது என நீ நினைக்கிறாயா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் ரோகிணி.

பின்னர் ரோகினியின் அம்மா முத்து மீனா இருவரும் மிகவும் நல்லவர்கள். அவர்களிடம் ஆவது உண்மையை கூறிவிடு என சொல்ல இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்குச் சென்ற ரோகிணி அவர்களால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை அவர்கள் பெரிய தியாகி போல நீ பேசுகிறாய் முதலில் இங்கிருந்து கிளம்பு என கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார் ரோகிணி.

பாட்டிக்கு மண்டையில் அடிபட்டு விடுகிறது

முத்துவும் மீனாவும் வெளியில் செல்லும்போது அவர்கள் தினமும் சந்திக்கும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியை போக்குவரத்து காவலர் ஒருவர் அவர்கள் கடைகளை அகற்றி அப்புறப்படுத்தி வருகின்றனர். தாத்தாவும் பாட்டியும் அழுதுகொண்டே அவர்களிடம் விட்டுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள். இதனை பார்த்து முத்துவும் மீனாவும் காவலரிடம் போய் கேள்வி கேட்க இருவருக்கும் முட்டிக்கொள்கிறது.

அப்பொழுது பாட்டியை போக்குவரத்து காவலர் தள்ளிவிட பாட்டிக்கு மண்டையில் அடிபட்டு விடுகிறது. இதனால் கோபமடைந்த முத்து காவலரின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிறார். பின்னர் பிரச்சினையாக அங்கிருந்து காவலர் சென்று விடுகிறார். முத்துவும் பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீட்டிற்கு செல்கிறார்.

கைது செய்யப்பட்ட முத்து

அப்போது முத்துவின் வீட்டிற்கு போலீஸ் வந்து முத்துவை கைது செய்கிறார்கள். இதனால் ஷாக்கான மீனா உடனே வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்போது விஜயா எங்க நீ செல்கிறாய்? எங்களுக்கு யார் சமைப்பார் என கேட்க இதைக் கேட்டு கோபமான மீனா என் புருஷன் தான் எனக்கு முக்கியம் சாப்பாடு முக்கியம் கிடையாது என கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.

காவல் நிலையத்திற்கு சென்ற மீனா முத்துவுக்கு அட்வைஸ் செய்கிறார். முத்து இதை கேட்டு இந்த மாதிரி அட்வைஸ் செய்வதாக இருந்தால் முதலில் இங்கிருந்து கிளம்பு என மீனாவிடம் கூறுகிறார். பின்னர் அந்த சமயத்தில் 30 லட்சம் பணத்தை திருடி சென்ற அந்த நபர்கள் குறித்து விசாரிக்க ரோகினியும் மனோஜும் காவல் நிலையத்திற்கு வருகிறார்கள்.

மனோஜின் கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்

காவல் நிலையத்திற்கு வந்த மனோஜ் முத்துவை பார்த்து நக்கல் செய்கிறார். பின்னர் 30 லட்சம் குறித்து போலீசாரிடம் விசாரிக்கையில் எப்பொழுது எனது பணம் கிடைக்கும் எந்த அளவுக்கு நீங்கள் விசாரணையை மேற்கொண்டு உள்ளீர்கள் என மனோஜ் கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு உங்கள் வழக்கு மட்டும்தான் இங்கு இருக்கிறதா? நிறைய வழக்கு இருக்கிறது என போலீஸ் பதில் சொல்ல அப்பொழுது மனோஜ் போலீஸ்காரரின் காதில் ஏதோ ஒன்று சொல்ல அதைக் கேட்டு கோபம் அடைந்த போலீஸ் மனோஜின் கன்னத்தில் பளார் என விடுகிறார்.

பின்னர் மற்றொரு காவலர் எதற்கு அவரை அடித்தீர்கள்? பார்க்க மிகவும் டீசன்டாக இருக்கிறார் அவரை போய் இப்படி அடிக்கிறீர்கள் என கேட்க அவர் மனோஜ் கூறியதாக அவர் காதில் ஒன்றை சொல்கிறார். அதைக் கேட்டு அவரும் கோபமடைந்து மனோஜை மற்றொரு கன்னத்தில் பளார் என அழைக்கிறார். இதேபோல மற்றொரு காவலரும் கேட்டு மனோஜை அடிக்கிறார்கள்.

முத்துவுக்கு புது எதிரி

பின்னர் ரோகிணி எதற்கு என் கணவரை இப்படி அடிக்கிறீர்கள் என கேள்வி கேட்க உன் கணவர் கேட்டதற்கு லாக்கப்பில் வைத்து அளித்திருக்க வேண்டும் என போலீஸ் பதில் கூற பின்னர் மனோஜிடம் நீ என்ன அப்படி சொன்னாய் என ரோகிணி கேட்க அதற்கு மனோஜ் ரோகினியின் காதில் ஒன்றை சொல்கிறார். அதை கேட்டு ரோகிணி மீண்டும் மனோஜை திட்டி அடிக்கிறார்.

பின்னர் அவர்கள் இருவரும் காவல் நிலையத்தை விட்டு செல்கிறார்கள். அதன் பிறகு காவல் நிலையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துவை அழைத்து விசாரிக்க முத்து நடந்ததை கூறுகிறார். பின்னர் முத்து மீது தவறு இல்லை என்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் போக்குவரத்துக் காவலரை அழைத்து எச்சரித்து அனுப்புகிறார். பின்னர் வெளியில் காத்துக்கொண்டிருந்த போக்குவரத்து காவலர் முத்துவை அழைத்து பேச முயல்கிறார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

தற்போது முத்துவுக்கு புது எதிரியாக இந்த போக்குவரத்து காவலர் என்ட்ரி கொடுக்கிறார். இவரால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப் போகிறது? கதை எந்த கோணத்தில் செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.