Siragadikka Aasai : ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகும் முத்து.. சிட்டி மூலம் காத்திருக்கும் ஆபத்து.. சிறகடிக்க ஆசை இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siragadikka Aasai : ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகும் முத்து.. சிட்டி மூலம் காத்திருக்கும் ஆபத்து.. சிறகடிக்க ஆசை இன்று!

Siragadikka Aasai : ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகும் முத்து.. சிட்டி மூலம் காத்திருக்கும் ஆபத்து.. சிறகடிக்க ஆசை இன்று!

Divya Sekar HT Tamil
Jan 10, 2025 12:50 PM IST

Siragadikka Aasai : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்.

Siragadikka Aasai : ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகும் முத்து.. சிட்டி மூலம் காத்திருக்கும் ஆபத்து.. சிறகடிக்க ஆசை இன்று!
Siragadikka Aasai : ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகும் முத்து.. சிட்டி மூலம் காத்திருக்கும் ஆபத்து.. சிறகடிக்க ஆசை இன்று!

மீனாவும் நானும் கோவில் சென்று அந்த சிசிடிவி காட்சியை கேட்கிறேன் என கூற நடுவில் வந்த ரோகிணி நீங்கள் இனி இந்த விஷயத்தில் எந்த உதவியும் எங்களுக்கு செய்ய வேண்டாம். நாங்களே எங்கள் பணத்தை கண்டுபிடித்துக் கொள்கிறோம் என கூறுகிறார். இதனைக் கேட்டு கோபமான முத்து நான் உங்களுக்காக எல்லாம் இதனை செய்யவில்லை. அப்பா கேட்டார் என்பதற்காக தான் இதை நான் செய்தேன் என கூறுகிறார்.

பணத்தை ஏமாற்றியவரை தேட வேண்டாம்

அண்ணாமலை ஏன் அவர்கள் பணத்தைக் குறித்து விசாரிக்க வேண்டாம் என கூறுகிறாய் என ரோகிணி இடம் கேட்க ரோகிணி அதற்கு ஏற்கனவே இவர் மனோஜை ரொம்ப மட்டம் தட்டி பேசுகிறார். இந்த பணத்தையும் இவர் கண்டுபிடித்து விட்டால் இதையே சொல்லிக் காட்டுவார். எனவே நாங்களே எங்கள் பணத்தை கண்டுபிடித்துக் கொள்கிறோம் என ரோகிணி கூற இதற்கு விஜயாவும் ரோகிணி சொல்வது தான் சரி இனி நீங்கள் பணத்தை ஏமாற்றியவரை தேட வேண்டாம். இவர்களே பார்த்துக் கொள்வார்கள் என விஜயா கூறுகிறார்.

இதனை கேட்ட அண்ணாமலை முத்துவிடம் இனி நீங்கள் உங்கள் வேலையை விட்டு இந்த விஷயத்தை பற்றி விசாரிக்க வேண்டாம். அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என கூற அதற்கு முத்து கடந்த முறை மாதிரி பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ஏமாற்றினார்கள் என்றால் நான் சும்மா விடமாட்டேன். பணத்தை வாங்கியவுடன் அதை உங்களிடம் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என கட்டளை இடுகிறார். பின்னர் அண்ணாமலையும் முத்து சொன்னது கேட்டதா என மனோஜிடம் கேட்டு அவன் சொல்வது போல பணம் கிடைத்தவுடன் என்னிடம் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறிவிட்டு சாப்பிட கிளம்புகிறார்.

ரொமான்ஸ் மோடில் மீனா-முத்து

பின்னர் கிச்சனில் பாத்திரத்தை கழுவிக் கொண்டே முத்துவிடம் ரோகிணி ஏன் இப்படி சொன்னார் என கேட்க ஏன் பணத்தை ஏமாற்றிய வரை நம்மளை தேட வேண்டாம் என ரோகிணி கூறினார் என கேள்வி எழுப்புகிறார் மீனா. இதற்கு முத்து கண்டிப்பாக இதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கும். பார்லர் அம்மா கண்டிப்பாக வேற ஒரு திட்டத்துடன் இருக்கும். ஏற்கனவே பணத்தை மலேசியாவில் இருந்து தனது அப்பா அனுப்பியதாக தானே கூறி நம்மை ஏமாற்றினார். சரி இனி நாம் இதை கண்டு கொள்ள வேண்டாம். அப்பாவே வேண்டாம் என சொல்லிவிட்டார் என முத்து கூறுகிறார்.

பின்னர் மீனா பூ கட்டிக் கொண்டிருக்கும்போது முத்து என்ட்ரி கொடுத்து இன்னும் ஏன் வேலை செய்து கொண்டிருக்கிறாய். பின்னர் அவர்கள் அந்த பூ காண்ட்ராக்ட் குறித்து பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது சிந்தாமணி இடம் கொஞ்சம் ஜாக்கிரதியாக இரு என முத்து எச்சரிக்கிறார். அப்பொழுது மீனா நான் எதற்கும் பயப்பட மாட்டேன் ஏதாவது என்றால் என் ஆளிடம் நான் சொல்வேன் என கூறுகிறார். முத்து என்னது ஆள யாரது என கேட்க அப்பொழுது இருவருக்கும் ரொமான்ஸ் நடக்கிறது. இப்படியாக இந்த காட்சி செல்கிறது.

வீடியோ வெளியான விவகாரம்

முத்துவும் மீனாவும் சத்யாவை சந்தித்து பேசுகிறார்கள். அப்பொழுது வீடியோ வெளியான விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருக்கையில் அது கண்டிப்பாக சிட்டி தான் வெளியிட்டு இருக்க வேண்டும் என பேசிக்கொள்கிறார்கள். பின்னர் முத்து சிட்டி உடன் இருக்கும் நபர்களிடம் நீ பேசிக் கொண்டிருக்கிறாயா என கேட்க சிலரிடம் நான் பேசுவேன் என சொல்ல அவர்களிடம் இது குறித்து நீ விசாரித்துப் பார் என முத்து சொல்கிறார். சத்யாவும் நான் விசாரித்து பார்க்கிறேன் என சொல்கிறார்.

ரோகிணி மிக விரைவில் வீட்டில் மாற்றுவார்?

பின்னர் ரோகிணியும், வித்தியாவும் சிட்டியை சந்திக்கிறார்கள். அவர்கள் வீட்டை வாங்க கொடுத்த 30 லட்சம் பணத்தை ஏமாந்தது குறித்து சிட்டியிடம் கூறி அந்த நபரை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு கோயிலுக்கு சென்று அந்த சிசிடிவி ஃபுட் டீஜில் உள்ள அந்த நபரின் புகைப்படத்தை எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என சிட்டி இடம் ரோகினி உதவி கேட்கிறார். சிட்டியும் ஓகே என சொல்லி அந்த பணியை செல்ல கிளம்புகிறார்.

பின்னர் முத்து தனது காரில் மலேசியா தம்பதியை ஏற்று சென்று சென்னையை சுற்றி பார்க்க அழைத்து செல்கிறார். அப்பொழுது அவர்களிடம் மலேசியா குறித்து விசாரிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் செல்கிறது. இதன் மூலம் ரோகிணி மிக விரைவில் வீட்டில் மாற்றுவார் என்பது தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.