Siragadikka Aasai : முத்து, மீனா போடும் பிளான்.. வலையில் சிக்கிய மனோஜ்? விஜயா கதி என்ன? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!
Siragadikka Aasai Serial : விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் நகை பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜயா இவங்க கொடுக்கும்போதே கவரிங் நகை தான் கொடுத்து இருப்பாங்க என்று சொல்ல சுருதி அவங்க கொடுத்திருந்தால் அவர்கள் எப்படி அதை கடையில் விக்கிறதுக்கு கொண்டு போவாங்க என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு விஜயா நகை இவங்க அம்மா வீட்ல தான் மாறி இருக்கணும். இவ அவங்க அம்மா வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வர இல்ல அப்போ இந்த நகை மாறி இருக்க வாய்ப்பு இருக்கு என்று விஜயா கூறுகிறார். இதைக் கேட்டு மீனா மிகவும் கோபப்பட்டு எங்கள் வளர்ப்பு அப்படி இல்லை. எங்கள் அப்பா எங்களுக்கு நேர்மையாக வாழ சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று கோபத்தோடு விஜயாவிடம் பேசுகிறார்.
கோபத்தில் மீனா
விஜயா என்ன ஓவராக பேசுகிறாய் என அதட்டி கேட்கிறார். அதற்கு மீனா நீங்கள் எப்படி எங்கள் வீட்டில் உள்ளவர்களை நகை மாற்றி வைத்தவாறு குற்றம் சொல்லுகிறீர்கள் என கேட்கிறார். அதற்கு ஏன் உன் தம்பி இதற்கு முன் பண்ண வில்லையா உன் தம்பி கூட நகையை எடுத்து மாற்றி வைத்திருக்கலாம் என விஜயா சொல்கிறான். இதைக் கேட்டு மீனா கோபம் அடைகிறார். பின்னர் உறுதியாக விஜயா மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.