சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 15 எபிசோட் : வசமாக சிக்கிய சிந்தாமணி.. ஏமாற்றத்தில் விஜயா.. மீனாவை புகழ்ந்து தள்ளும் முத்து
சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 15 எபிசோட் : வழக்கம்போல் மனோஜ், மீனாவை மட்டமாக பேச முத்துவிடம் மொக்கை வாங்கி கொள்கிறார். இதனையடுத்து அனைவரும் மீனாவை வாழ்த்த முத்து, மீனாவுக்கு மாலை அணிவிக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 15 எபிசோட் : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம். நேற்றைய எபிசோடு தொடர்ச்சியாக இன்று வசமாக சிக்கிய சிந்தாமணியும், மேனேஜரும் மண்டபம் ஓனரை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள். பின்னர் மண்டபம் ஓனர் இருவரையும் திட்டி விட்டு பணத்தை மீட்டு மீனாவிடம் கொடுக்கிறார்.
உன்னுடைய நேர்மைக்கு நீ கண்டிப்பாக முன்னேறுவாய் இதேபோல் நிறைய ஆர்டர் எடு, இனிமேல் என் மண்டபத்தில் வரும் ஆர்டர்கள் எல்லாமே உன்னுக்குத்தான் என கூற மகிழ்ச்சியில் மீனா அவருக்கு நன்றி கூறுகிறார். அதன் பிறகு, சிந்தாமணியிடம் வாழு வாழ விடு என்று கூறி, சவால் விட்டுவிட்டு மீனா வெளியேறுகிறார். பின்னர் சீதா என் அக்காவை அளிக்க நினைத்தால் இதுதான் நிலைமை, நானா இருந்தா இந்நேரத்துக்கு பேசிகிட்டு இருக்க மாட்டேன் என சொல்ல நீ என்னை அடித்து விடுவாயா என சிந்தாமணி கேட்க உன்ன மாதிரி ஆளெல்லாம் அடிச்சா தப்பே இல்லை என மீனா சொல்கிறார். பின்னர் சீதாவை சமாதானப்படுத்தி மீனா அழைக்க செல்கிறார்.
மீனாவுக்கு உதவும் பைனான்சியர்
இதற்குப் பிறகு, மீனா பைனான்சியரிடம் சென்று வாங்கிய பணத்தை கொடுப்பதற்காக செல்கிறார். பைனான்சியர், ஏன் தாமதம்? என்று கேட்கிறார். அதற்கு மீனா சிந்தாமணி செய்த சதியால் தான் காலதாமதம் ஆனது என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில், ஏற்கனவே சிந்தாமணியின் புகைப்படம் அவர் வீட்டில் இருந்ததால், அவர் அவருக்கு நெருக்கமான உறவினராக இருக்கலாம் என தெரிகிறது.
இருப்பினும், பைனான்சியர் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பணம் வாங்கிக்கொள். அந்த சிந்தாமணியை தோற்கடிக்க நீ என்ன உதவி கேட்டாலும் நான் செய்கிறேன் என்று மீனாவிடம் உறுதியளிக்கிறார். உன்னை தொழிலை விட்டு ஓட விடுவேன் என்று சொன்ன சிந்தாமணியை நீ ஓட விடு என சொல்ல அதற்கு மீனா எடுக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை சார் என்னை என் தொழிலை நிம்மதியா செய்ய விட்டாலே போதும் என சொல்கிறார். உனக்கு இருக்கிற பக்குவம் கூட அந்த சிந்தாமணிக்கு இல்லை என அவர் சொல்கிறார். பின்னர் நன்றி சொல்லிவிட்டு மீனா செல்கிறார்.
மீனாவை பாராட்டும் குடும்பம்
பிறகு, மீனா முத்துவிடம் நடந்ததை கூறுகிறார். அதற்கு என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அந்த மேனேஜரின் அறைந்திருப்பேன் என்று முத்து பதிலளிக்கிறார். மீனா அதனால்தான் சொல்லவில்லை, ஆனால் பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது என்று கூறுகிறார். முத்து வீட்டிற்குத் திரும்பிய பின், மீனா மற்றும் முத்து, நடந்ததை அண்ணாமலையிடம் கூறுகின்றனர். அண்ணாமலை, மீனாவை பாராட்டி, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? என்று கேட்கிறார். அப்போது, சுருதி எனக்குத் தெரியும் அங்கிள், நான்தான் சிந்தாமணி போல் பேசி உதவி செய்தேன் என்று சொல்கிறார். அப்போது ரவியும் மீனாவை பாராட்டுகிறார்.
அண்ணாமலை மீனாவிடம் மனைவி வெற்றியை கணவர் கொண்டாடுவது யாரும் அவ்வளவாக செய்ய மாட்டார்கள். பொறாமை தான் படுவார்கள். ஆனால் முத்து உன் வெற்றியை பார்த்து அவன் வெற்றி போல கொண்டாடுகிறான். இதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீ ரொம்ப கொடுத்து வச்சவ என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு மீனாவும் ஆமாம் என்ன சொல்கிறார்.
மீனாவை மட்டமாக பேசும் மனோஜ்
ஆனால் வழக்கம்போல் மனோஜ், மீனாவை மட்டமாக பேச முத்துவிடம் மொக்கை வாங்கி கொள்கிறார். இதனையடுத்து அனைவரும் மீனாவை வாழ்த்த முத்து, மீனாவுக்கு மாலை அணிவிக்கிறார். அதன்பிறகு, பரசுவின் மகளின் திருமணம் குறித்து அனைவரும் பேசுகின்றனர். இதைப் பார்த்த விஜயா, கோபத்துடன் உட்கார்ந்து இருக்கிறார். ஸ்வீட்டை கூட வாங்க மறுக்கிறார்.இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

தொடர்புடையை செய்திகள்