சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : மீனா போட்ட ஸ்கெட்ச்.. கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி.. பளார் விட்ட ஓனர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : மீனா போட்ட ஸ்கெட்ச்.. கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி.. பளார் விட்ட ஓனர்!

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : மீனா போட்ட ஸ்கெட்ச்.. கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி.. பளார் விட்ட ஓனர்!

Divya Sekar HT Tamil Published Mar 14, 2025 01:04 PM IST
Divya Sekar HT Tamil
Published Mar 14, 2025 01:04 PM IST

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : மீனா போட்ட ஸ்கெட்ச்.. கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி.. பளார் விட்ட ஓனர்!
சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 14 எபிசோட் : மீனா போட்ட ஸ்கெட்ச்.. கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி.. பளார் விட்ட ஓனர்!

அப்போது மீனா வேண்டாம் நான் என் அம்மாவிடம் வாங்கித் தருகிறேன் என்னுடன் வாருங்கள் எனக்கூட்டி செல்கிறார். அப்போது அம்மாவிடம் 3000 பணம் கேட்கிறார். ஆனால் அவரிடம் குறைவாக தான் இருக்கிறது பின்னர் சத்யாவும், சீதாவும் தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து மூவாயிரத்தை ரெடி பண்ணி அவர்களிடம் கொடுக்கிறார்கள்.

சிந்தாமணியை ஏமாற்றும் சீதா

பின்னர் மீனாவின் அம்மா என்னம்மா ஆச்சு பணம் கிடைச்சுதா என் கேட்க இன்னும் இல்லை அம்மா என சொல்கிறார். அடுத்து என்ன பண்ண போற என்று கேட்டவுடன் மீனா ஒரு திட்டம் போட்டு சீதாவிடம் சிந்தாமணியில் நம்பரை கொடுத்து ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு அதை நீங்கதான் பண்ணி தரணும் என்று சொல்லி போன் போட்டு பேசுகிறார். உடனே அவரும் மேனேஜரை கவனிக்கணும் அதுக்கு எல்லாம் தனியா இருக்கு சரி நான் பாத்துக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்க கல்யாணமா என்று கேட்டுவிட்டு இதே மாதிரி நிறைய ஆர்டர் புடிச்சு கொடுத்தீங்கன்னா உங்களுக்கும் கமிஷன் தரேன் என்று சீதாவிடம் சொல்லுகிறார்.

மீனா அதனை ரெக்கார்ட் செய்து விட்டு சீதாவை அழைத்துக் கொண்டு சுருதியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல சுருதி நம்ப வச்சு ஏமாற்றி இருக்காங்க. அவங்கள முதல்ல போலீஸ்ல புடிச்சு கொடுக்கணும். எங்க அப்பா கிட்ட சொன்னா அவங்கள போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவார். இல்ல சுருதி நான் ஆல்ரெடி போலீஸ் கிட்ட பேசிட்டேன் நான் கையெழுத்து போட்டு கொடுத்ததனால கேஸ் அவங்க பக்கம் தான் ஜெயிக்கும் சொல்லிட்டாங்க. அவங்கள வேற மாதிரி தான் டீல் பண்ண வேண்டும் என சொல்கிறார். பின்னர் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என கேட்கிறார். என்ன பண்ண வேண்டும் என சுருதி கேட்கிறார்.

சிந்தாமணி போல் பேசிய சுருதி

போனில் சிந்தாமணி வாய்ஸ் ரெக்கார்ட் செய்து இருந்ததை சுருதியிடம் போட்டுக்காட்டி இவங்க வாய்ஸ்ல நீங்க மண்டபம் மேனேஜர் கிட்ட பேசணும் என்று சொல்ல ஈஸியா பேசிடுவேன் என்று சொல்லுகிறார் சுருதி . உடனே சுருதி மேனேஜருக்கு போன் போட்டு சிந்தாமணி போல் பேசுகிறார். அப்போது அந்த மேனேஜர் பணம் வந்துடுச்சு ஆனா நீங்க சொன்னதுனால தான் இன்னும் மீனாவுக்கு கொடுக்காம இருக்கேன் என்று சொல்ல உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வீட்டுக்கு எடுத்துட்டு வரவா என்று கேட்கிறார். வேண்டாம் பொன்னியம்மன் கோவிலுக்கு எடுத்துட்டு வர சொல்லி சிந்தாமணி வாய்ஸில் சுருதி சொல்லுகிறார்.

பின்னர் உடனே சிந்தாமணியை வர வைக்க சீதா பொண்ணு வீட்ல பேசிட்டேன் அவங்க அட்வான்ஸ் கொடுக்க பொன்னியம்மன் கோவிலுக்கு வர சொல்றாங்க என்று சொல்லி சிந்தாமணியையும் அதே கோவிலுக்கு வர வைக்கின்றனர். உடனே மீனா இன்னொரு முக்கியமான ஆளு கிட்ட பேசணும் என்று வெளியில் வந்து யாரிடமோ போனில் பேசுகிறார் உடனே சீதா மற்றும் சுருதி இருவரும் வெளியில் வர மீனாவிடம் சுருதி நீங்க ரொம்ப ஃக்ளவரா யோசிக்கிறீங்க எந்த ஹெல்ப் வேணாலும் என்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி

மறுபக்கம் இவர்களின் வருகைக்காக மீனாவும் சீதாவும் கோவிலில் காத்துக் கொண்டிருக்க மேனேஜர் வந்து விட உடனே சிந்தாமணியும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறார். மேனேஜரை பார்த்து இவன் இங்கே என்ன பண்றான் என சிந்தாமணி யோசிக்க பின்னர் மேனேஜர் நான் பணம் கொண்டு வந்திருக்கிறேன் உங்களுக்காக தான் காத்திருக்கிறேன் என சொல்கிறார். பின்னர் அந்த பணத்தை சிந்தாமணியிடம் கொடுக்கிறார், நான் இங்கு வருவேன் என உனக்கு எப்படி தெரியும் என சிந்தாமணி கேட்க நீங்கள் தான் என்னை வர சொன்னீர்கள் என சொல்கிறார்.

நான் உன்னை வர சொல்லவில்லையே நான் உனக்கு போன் பண்ணவே இல்லையே என்ன சிந்தாமணி சொல்ல அப்பொழுது மீனா சீதா இருவரும் நான்தான் வர சொன்னேன் என சொல்கிறார். பின்னர் அந்த மண்டபத்தின் ஓனரும் அங்கு வருகிறார். வந்து மேனேஜரை அடிக்கிறார். சிந்தாமணியும் எச்சரித்து செல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Divya Sekar

TwittereMail
திவ்யா சேகர், 2019 முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் உண்டு. இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முடித்துள்ளார். இவர் தமிழ்நாடு, பொழுதுபோக்கு, லைஃப் ஸ்டைல்,ஜோதிடம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். இவருக்கு பொழுதுபோக்கு திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, புது இடத்திற்கு சென்றால் அதனை எக்ஸ்ப்ளோர் செய்து வீடியோவாக பதிவிடுவது ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.