சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. நடக்க போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. நடக்க போவது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. நடக்க போவது என்ன?

Divya Sekar HT Tamil Published Mar 13, 2025 10:24 AM IST
Divya Sekar HT Tamil
Published Mar 13, 2025 10:24 AM IST

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : அண்ணாமலை, தன்னை ஒரு கடைக்காரன் ஏமாற்றியதாகவும், அவனது பாணியிலேயே அவனை ஏமாற்றினேன் என்றும் கூறுகிறார். உடனே மீனா நாமும் மண்டப மேனேஜரை ஏமாற்றி தான் பணத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. நடக்க போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 13 எபிசோட் : மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா.. நடக்க போவது என்ன?

அம்மாவிடம் புலம்பும் மீனா

அப்போது மீனாவின் அம்மா, எப்படி இப்படி எல்லாம் அவர்கள் ஏமாற்றுகிறார்கள், கண்டிப்பாக அவர்கள் நல்லாவே இருக்க மாட்டாங்க கஷ்டப்படுற நம்மள இப்படி மேலும் கஷ்டப்பட வைக்கிறாங்க என சொல்ல அதற்கு மீனா நான் இந்த தொழிலை பண்ணி இருக்கவே கூடாது, பூ கட்டிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் என சொல்ல அதற்கு மீனாவின் அம்மா அப்படியெல்லாம் இல்லை நாங்கள்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள் வாழ்க்கை மாற வேண்டும் என்று இந்த பூ கட்டும் தொழிலையே நம்பி இருக்கிறோம். ஆனால் நீ அப்படி இருக்க கூடாது. மேலும் மேலும் வளர வேண்டும் என ஊக்கம் கொடுக்கிறார்.

இன்ஸ்பெக்டர் வீட்டிற்குச் செல்லும் மீனா

இதனை அடுத்து, தினமும் பூ கொடுக்க செல்லும் இன்ஸ்பெக்டரிடம் இது குறித்து கூறலாம் என்று முடிவெடுக்கிறார். இன்ஸ்பெக்டர் வீட்டிற்குச் மீனாவும் அவரது தம்பியும் செல்கிறார்கள். இன்ஸ்பெக்டர் டாக்குமெண்ட்டை படித்து பார்த்துவிட்டு, பக்காவாக எழுதி இருக்கிறது, இதை சட்டரீதியில் எதுவும் செய்ய முடியாது. ஆனால், நான் முடிந்தளவு விசாரிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து, சோகத்துடன் வெளியே வரும் மீனா, இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மிகப்பெரிய முட்டாளாகி விட்டேன் என்று புலம்புகிறார். அவரது தம்பி, அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அப்போது முத்து போன் செய்கிறார். முத்துவிடம் மீனா எதுவும் சொல்லாமல் மீண்டும் மறைத்து பேசுகிறார். பணம் கொடுத்து விட்டாயா என கேட்டதற்கு இன்னும் இல்லை இன்னும் பணம் வரவில்லை என சொல்ல, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என சொல்ல இன்னும் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் வரவில்லை அதனால் நாளை தருகிறேன் என சொல்கிறார்கள் என மீனா முத்துமிடம் பொய் சொல்கிறார். மீனாவின் குரலில் மாற்றத்தை கண்டுபிடித்த முத்து என்ன ஆச்சு என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க என சொல்லி சமாளிக்கிறார். முத்துவும் வேலை செய்த களப்பில் மீனா அப்படி பேசுகிறார் என நினைக்கிறார்.

மீனாவை சீண்டி பார்க்கும் விஜயா

இந்த நிலையில், வீட்டிற்கு வரும் மீனாவை விஜயா சீண்டி பார்க்கிறார். எங்க போய் ஊர் சுத்திட்டு வர டைம் என்ன ஆச்சு எதுவும் சமைக்காம இருக்க என திட்ட அப்போது நான் எப்பயும் சமைக்கும் நேரம் இதுதான், மாமா இனிமே தான் வருவார் அவருக்கு இனிமேதான் சமைக்க போகிறேன் என சொல்ல அப்போ எனக்கு சமைக்க மாட்டியா என சொல்ல உங்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன் அத்தை என மீனா சொல்கிறார்.

ஏன் இப்படி இருக்கிறாய்? உடம்புக்கு நல்லாதானே இருக்கிறது? என்று கேட்கிறார். உடனே மீனா உடம்புக்கு எல்லாம் நல்லாதான் இருக்கிறது, மனசு தான் சரியில்லை. எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதுதான் உங்களுக்கு தெரிந்திருக்குமே. சிந்தாமணி சொல்லியிருப்பார்களே. ஒருவேளை சொல்லவில்லை என்றால், அவரிடம் போன் போட்டு கேட்டுப் பாருங்கள். எல்லாவற்றையும் சொல்வார் என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார்.

அப்போது, அண்ணாமலை, தன்னை ஒரு கடைக்காரன் ஏமாற்றியதாகவும், அவனது பாணியிலேயே அவனை ஏமாற்றினேன் என்றும் கூறுகிறார். உடனே மீனா நாமும் மண்டப மேனேஜரை ஏமாற்றி தான் பணத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.

Divya Sekar

TwittereMail
திவ்யா சேகர், 2019 முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் உண்டு. இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முடித்துள்ளார். இவர் தமிழ்நாடு, பொழுதுபோக்கு, லைஃப் ஸ்டைல்,ஜோதிடம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். இவருக்கு பொழுதுபோக்கு திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, புது இடத்திற்கு சென்றால் அதனை எக்ஸ்ப்ளோர் செய்து வீடியோவாக பதிவிடுவது ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.