Singer Suchitra: "ஆர்த்தி கூட ஜெயம் ரவி வாழ்ந்ததே பெரிசு" - முன்பே கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா-singer suchitra speech about actor jayam ravi and aarthis divorce issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: "ஆர்த்தி கூட ஜெயம் ரவி வாழ்ந்ததே பெரிசு" - முன்பே கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

Singer Suchitra: "ஆர்த்தி கூட ஜெயம் ரவி வாழ்ந்ததே பெரிசு" - முன்பே கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

Karthikeyan S HT Tamil
Sep 09, 2024 04:16 PM IST

Singer Suchitra: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இது குறித்து பாடகி சுசித்ரா முன்பே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Singer Suchitra: "ஆர்த்தி கூட ஜெயம் ரவி வாழ்ந்ததே பெரிசு" - முன்பே கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா
Singer Suchitra: "ஆர்த்தி கூட ஜெயம் ரவி வாழ்ந்ததே பெரிசு" - முன்பே கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

இந்த நிலையில் இன்று நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத் துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், தன் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

கடினமான முடிவு

நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்." என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

பாடகி சுசித்ரா பேட்டி

இந்த நிலையில், இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து பிரபல பாடகி சுசித்ரா தனது யூடியூப் சேனலில் முன்பே பேசி இருந்தார். அதில், "என் ஆதரவு நடிகர் ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது, அவர் மிகவும் ஆடம்பரமான பெண். அவளை மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்றால், ஜெயம் ரவி நைட் அண்ட் டே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வீட்டுக்கு சென்றாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது.

"ஜெயம் ரவி ஆர்த்தி கூட வாழ்ந்ததே பெரிசு"

ஆர்த்தி, அழகாக இருந்ததால், குழந்தைகள் இருந்ததால், இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டே வாழ்ந்துவிட்டார் ஜெயம் ரவி. இத்தனை வருசம் ஜெயம் ரவி ஆர்த்தி கூட வாழ்ந்ததே பெரிசு." என்று பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருந்தார். தற்போது அவர் சொன்னபடியே நடந்து விட்டது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வலைப்பேச்சு அந்தணன்

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசும் போது, "ஜெயம் ரவி தனது மாமியாரிடம் சம்பளம் கேட்பது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. உண்மையில் ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு எப்போதும் சந்தேகம். அதனால் ஆர்த்தி, ரவிக்கு எப்போதும் போன் செய்து கொண்டே இருப்பாராம்.

நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட்

ஜெயம் ரவி போனை எடுக்கவில்லை என்றால், உடனே ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் போன்ற ஒருவரைக் கூட விடமாட்டார். எல்லோரையும் அழைத்து ரவியைப் பற்றி விசாரிப்பார். ஒருவேளை யாரும் போனை எடுக்கவில்லை என்றால் நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விடுவார். அவுட்டோர் ஷூட்டிங் என்றால் கூட திடீரென்று அங்கேயே நின்றுவிடுவார்.

ஆர்த்திக்கு சந்தேகம்

ஜெயம் ரவியைத் தொடர்ந்து இது போல் செய்து வருவதால் இதை ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை, அதனால் தான் பிரச்சினை ஆரம்பித்தது. ஜெயம் ரவி மேல் எப்போதுமே ஆர்த்திக்கு சந்தேகம் இருக்கிறது” என்று பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.