‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’ - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!
ஆர்த்தி இந்த விஷயத்தை கோர்ட்டில் இழுத்தால், ஜெயம் ரவி நாங்கள் நண்பர்களாகதான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவார். அவர்களுக்குள் தாம்பத்திய உறவு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாது. - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!

‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’ - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!
ஜெயம் ரவியும் கெனிஷாவும் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மேலும் படிக்க | ‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
இதனைதொடர்ந்து நேற்றைய தினம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஆர்த்தி எப்போதும் தனக்கு முன்னாள் மனைவிதான் என்றும் குழந்தைகளை தான் கவனிக்க வில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு.
தன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று காட்டமாக பேசி இருந்தார். இந்த விவாகரம் குறித்து பிரபல பாடகி பேசி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், மீண்டும் ஒரு வீடியோவை சுசித்ரா வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ‘நேற்று நான் ஜெயம் ரவி கெனிஷா விவகாரம் குறித்து பேசி இருந்தேன். அதில் சிலர் நீங்கள் சொல்வது போல ஆர்த்தி கொடுமைக்காரிதான்; கெனிஷா மிகவும் நல்லவர் என்று வைத்துக் கொண்டால் கூட, முறையான விவாகரத்து பெறாமல், ஜெயம் ரவி இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் நுழைவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருந்தீர்கள்.

