Singer suchitra: ‘படுக்கையை பகிர ஷாம்பு பாட்டில்.. அவர அசிங்கப்படுத்திட்டேன்’ - வைரமுத்துவின் லீலைகள்!
Singer suchitra: என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம் மறைமுகமாக சுசித்ரா உங்களுடைய மகள் போன்றவள். .அவளை நீங்கள் தான் வளர்த்தெடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வைரமுத்துவிற்கு வேர்த்துக்கொட்டி விட்டது. - வைரமுத்துவின் லீலைகள்! - சுசித்ரா!
வைரமுத்து, அவருடன் படுக்கையை பகிர்வதற்காக ஷாம்பு பாட்டிலை பரிசாக கொடுத்த கதையை பாடகி சுசித்ரா பகிர்ந்து இருக்கிறார்.
பரிசாக வந்த ஷாம்பு
இது குறித்து அவர் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசும் போது, "வைரமுத்து என்னை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தபொழுது எனது பாட்டியுடன் சென்றிருந்தேன். அவர் தனியாக வரவில்லையா என்று கேட்ட போதே, அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. என்னுடைய பாட்டியும் அதனை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டார்.
இதையடுத்து என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம் மறைமுகமாக சுசித்ரா உங்களுடைய மகள் போன்றவள். .அவளை நீங்கள் தான் வளர்த்தெடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வைரமுத்துவிற்கு வேர்த்துக்கொட்டி விட்டது. இதையடுத்து அவர் கர்ஷிப்பை வைத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டார்.
வெளுத்து விட்ட பாட்டி
இப்படி பாட்டி சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோதே, ஏதோ பரிசு தருகிறீர்கள் என்று கூறினீர்களே எங்கே என்று கேட்க, வைரமுத்து ஏதாவது கொடுத்து சமாளிக்க வேண்டும் என்பதற்காக, உள்ளே இருந்து இரண்டு ஷாம்பு பாட்டில்களை எடுத்து என் கையில் கொடுத்தார்.
இந்த துறையில் ஆரம்பத்தில் நான் பின்னணி பாடகர்களுடன் கோரஸ் பாடி கொண்டிருக்கும் பொழுதே, அவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அங்கு தான் நான் இது போன்ற நபர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அப்போது வைரமுத்து பற்றி அவர்கள் கூறும் பொழுது, அவருக்கு நாம் வளைந்து கொடுக்கவில்லை என்றால், அவர் சில பரிசு பொருட்களை நமக்கு தருவார்.ஒவ்வொரு பரிசுப் பொருளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அவரது வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களுக்கு அந்த பொருளுக்கான அர்த்தம் நன்றாகவே தெரியும். இது என் மனதில் வந்தது.
இருப்பினும், நாங்கள் நாங்கள் அந்த ஷாம்பு பாட்டிலை வாங்கி கொண்டோம். நான் அதனை அவரது வீட்டில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டு விடலாம் என்று நினைத்தேன. ஆனால் என்னுடைய பாட்டிதான் வேண்டாம் பிரச்சினை பெரிதாகி விடும் என்று சொல்லி, அழைத்து வந்தார். அதன் பின்னர் அதனை நாங்கள் என்னுடைய பரிசு பொருட்களை வைக்கும் ஷோக்கேசில் வை த்திருந்தேன் வீட்டிற்கு வந்து அதைப்பற்றி கேட்கும் ஒவ்வொருவரிடமும் அதனை பற்றி நாங்கள் சொல்லி சிரிப்போம். அதன் பின்னர் ஒருநாள் நானே கோபத்தில் அதனை தூக்கி போட்டு விட்டேன்." என்று பேசினார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்