Singer suchitra: ‘இளையராஜாவுக்கு புள்ளையா பொறந்துட்டு… டேட்டிங்கிற்கு போலாமான்னு..கெட்ட வார்த்தை போட்டு’ - சுசித்ரா!
Singer suchitra: என்னிடம் அவர் ஒருநாள், நான் காதலிக்காமல் கல்யாணம் செய்து விட்டேன். எனக்கு டேட்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆகையால் என்னை ஒரு டேட்டுக்கு கூட்டிச் செல்கிறீர்களா என்று கேட்டார். - சுசித்ரா

பிரபல பாடகியான சுசித்ரா, கார்த்திக் ராஜா தன்னை டேட்டிங்கிற்கு அழைத்ததாக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
டேட்டிங்கிற்கு அழைத்த கார்த்திக் ராஜா
இது குறித்து அவர் பேசும் போது, “வைரமுத்து மோசமானவர்களின் பட்டியலில் முதல் இடம் என்றால், அதில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவிற்கு இரண்டாம் இடம். ஒரு ஸ்டூடியோவில் இருந்து ஒரு வாய்ப்பு வந்து, அங்கு கார்த்திக் ராஜா இருப்பார் என்றால், நான் அங்கு செல்ல மாட்டேன். அதற்கு காரணமாக ஒரு சம்பவம் நடந்தது. என்னிடம் அவர் ஒருநாள், நான் காதலிக்காமல் கல்யாணம் செய்து விட்டேன். எனக்கு டேட்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆகையால் என்னை ஒரு டேட்டுக்கு கூட்டிச் செல்கிறீர்களா என்று கேட்டார்.
அவரிடம் இருந்து நான் அதனை எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் கோபப்பட்டு அவரை கெட்ட வார்த்தை போட்டு கடுமையாக திட்டி விட்டேன். உன்னுடைய அப்பா யார் என்று உனக்குத் தெரியும் அல்லவா அப்பேர்ப்பட்ட ஒருவருக்கு நீ பிள்ளையாக பிறந்து, இப்படி ஒரு வார்த்தையை ஒரு பெண்ணிடம் கேட்கலாமா என்று கேட்டேன்.