தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!

Singer Suchitra: என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!

Aarthi Balaji HT Tamil
May 14, 2024 06:59 AM IST

Singer Suchitra: சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஓரினச்சேர்க்கையாளராக வெளிவர அவருக்கு தைரியம் இல்லை என கூறி உள்ளார்.

என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!
என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!

ட்ரெண்டிங் செய்திகள்

2016 ஆம் ஆண்டில், சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசீலீக்ஸ் என்ற பெயரில் வந்த நட்சத்திரங்களின் தனிப்பட்ட படங்களுக்குப் பின்னால் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் இருப்பதாக குற்றம் சாட்டினார். தனுஷ் மீதும் சுசித்ரா பெரிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் குமார், யார்டீ நீ மோகினி படத்துக்குப் பிறகு நட்பு கொண்டார்கள்.

அவர்களுக்கு ஒரு குழு இருந்தது. அது உலகையே மாற்றும் என்று கூறப்பட்டது. அந்தக் குழுவில் எனது முன்னாள் கணவர் தனுஷ், ஆண்ட்ரியா, புகைப்படக் கலைஞர் ராமு ஆகியோர் இருந்ததாக சுசித்ரா கூறுகிறார்.

அண்மையில் குமுதம் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில். " ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார். அவன் கால் நடுங்கிக் கொண்டிருந்தது. புகைப்பிடித்து கொண்டு வந்து நின்றார்.

நடிகைகள் ஏன் புகார் தரவில்லை

சுச்சி கசிவுகள் கை மீறிய ஒரு செயல். ஏன் இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட நடிகைகள் யாரும் புகார் கொடுக்கவில்லை. புகைப்படங்கள் தெரிந்தே கொடுக்கப்பட்டு உள்ளது. அது ஒரு பெரிய சேட்டை. இதை தனுஷ், கார்த்திக் குமார் தான் இணைந்து செய்தார்கள்.

ஓரினச்சேர்க்கையாளரா கார்த்திக்?

சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஓரினச்சேர்க்கையாளராக வெளிவர அவருக்கு தைரியம் இல்லை. திருமணமான இரண்டு வருடங்களில் நான் அதை கண்டு பிடித்தேன். என் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறதா என்று மருத்துவர் என்னிடம் கேட்டார். 

பன்னிரண்டு வருடங்களாக விவாகரத்து கேட்டேன். தனுஷும் அவரும் அறையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ன ஒரு குழு. என்ன பார்ட்டி நடந்தது என இரண்டு பேரில் யாராவது ஒருவர் என்னிடம் சொல்ல வேண்டும்.

ஆண் நண்பர்களுடன் பழக்கம்

திருமணமான முதல் ஆண்டு எனக்கும், கார்த்திக் குமாருக்கும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரிடம் சென்றோம். அப்போது தான் அவர், ஓரினச்சேர்க்கையாளரா என மருத்துவர் கேட்டார். அதற்கு பிறகு அவர் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பழகுவதை நான் கவனித்தேன். அடிக்கடி மும்பை சென்றுவிடுவார் ” என்றார்.

ஏற்கனவே தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் பெரிய குண்டு வீசியது போல் இருக்கிறது. அது அடங்குவதற்குள் பாடகி சுசித்ரா பேசிய இந்த விஷயம் பூதாகரமாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

நன்றி: குமுதம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்