‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தவறு செய்தார்கள். சினிமா உலகில் யாருமே செய்யாத தவறையா ஜெயம் ரவி செய்து விட்டார்; எல்லோரும் கமுக்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். - சுசித்ரா

‘யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
ஜெயம் ரவியும் கெனிஷாவும் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனைதொடர்ந்து நேற்றைய தினம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஆர்த்தி எப்போதும் தனக்கு முன்னாள் மனைவிதான் என்றும் குழந்தைகளை தான் கவனிக்க வில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு; தன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று காட்டமாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பலரும் பல்வேறு விதமாக பேசி வரும் நிலையில், பாடகி சுஜித்ரா இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.