Singer Suchitra Apology: மன்னிச்சுடுங்க..நீங்கதான் உலகத்துல ஒரே ஆம்பள - முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா-singer suchitra apology to her ex husband karthik kumar for comment against him in an interview - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra Apology: மன்னிச்சுடுங்க..நீங்கதான் உலகத்துல ஒரே ஆம்பள - முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா

Singer Suchitra Apology: மன்னிச்சுடுங்க..நீங்கதான் உலகத்துல ஒரே ஆம்பள - முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 15, 2024 07:37 AM IST

மன்னிச்சுடுங்க, நீங்கதான் உலகத்துல ஒரே ஆம்பள, டேக் கேர் என கூறி முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா, தனது யூடியூப் சேனலில் விடியோவாக பகிர்ந்துள்ளார்.

Singer Suchitra Apology: முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா
Singer Suchitra Apology: முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா

போலீஸுக்கு ஒத்துழைப்பு

இந்த விவகாரம் தொடர்பாக கார்த்திக் குமார், சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையில் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். அதில், தன்னை ஓரின சேர்க்கையாளர் என தொடர்ந்து பேசி வரும் சுசித்ரா பொதுமக்களுக்கு தெரியும் விதமாக மன்னிப்பு கோர வேண்டும். அத்துடன் இ-மெயில் மூலமாகவும் மன்னிப்பு கோர வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் தரப்பில் கார்த்திக்கிடம் மன்னிப்பு கோருமாறு சுசித்ராவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் போலீஸுக்கு ஒத்துழைப்பு தரும் விதமாக இந்த விடியோவாக வெளியிட்டிருப்பதாக சுசித்ரா தனது விடியோ பதிவில் கூறியுள்ளார்.

பல வாரங்களாக தனக்கு காவல்துறையினரிடமிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னர் அச்சுறுத்தல்களை வந்தன. காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி, இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பின்தொடர்ந்து வருவதாகவும், மன்னிப்பு கேட்கத் தவறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தருந்தார். மேலும் மோதலைத் தவிர்க்க, பொது மன்னிப்பை வெளியிட முடிவு செய்ததாக சுசித்ரா கூறியுள்லார்.

கார்த்திக் குமாரின் தொழில் என பேச்சால் சேதமடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று விடியோவில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா பேச்சு

கடந்த மே மாதம் இரண்டு யூடியூப் சேனலுக்கு நடிகை சுசித்ரா அளித்த பேட்டியில், முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் ஓரின சேர்க்கையாளர் என்று சுசித்ரா கூறினார்.

அதேபோல் பிரபல நடிகர்கள் தனுஷ், த்ரிஷா, விஜய், கமல், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்பட பல்வேறு பிரபலங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த போட்டியை தொடர்ந்து, கார்த்திக் குமார், சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், தன்னை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதேபோல் சுசித்ரா பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

கார்த்திக் குமார் - சுசித்ரா விவாகரத்து

பிரபல எஃப்எம்மில் ஆர்ஜேவாக இருந்த சுசித்ரா, 2005இல் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இந்த ஸ்டார் ஜோடி 2018இல் விவாகரத்து பெற்றனர்.

2016இல் #suchileaks என்ற பெயரில் பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்களும், அவர்களு குறித்த ரகசிய தகவல்களும் சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சர்ச்சைய கிளப்பியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுசித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2020இல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளாராக பங்கேற்றார். அதன் பின்னர் தற்போது அளித்த பேட்டி மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.