'பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான அது.. எனக்கு ரொம்ப சந்தோஷம்..' வைரலாகும் சுச்சி போஸ்ட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான அது.. எனக்கு ரொம்ப சந்தோஷம்..' வைரலாகும் சுச்சி போஸ்ட்..

'பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான அது.. எனக்கு ரொம்ப சந்தோஷம்..' வைரலாகும் சுச்சி போஸ்ட்..

Malavica Natarajan HT Tamil
Jan 07, 2025 01:57 PM IST

என் வீட்டிற்கு பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான் இப்போ நடுங்கிட்டு இருக்குன்னு விஷாலின் உடல்நிலை குறித்து பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

'பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான அது.. எனக்கு ரொம்ப சந்தோஷம்..' வைரலாகும் சுச்சி போஸ்ட்..
'பாட்டில் தூக்கிட்டு வந்த கை தான அது.. எனக்கு ரொம்ப சந்தோஷம்..' வைரலாகும் சுச்சி போஸ்ட்..

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இதனால், பட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

பரிதாப நிலையில் விஷால்

இதையடுத்து படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் விஷால் கை நடுக்கத்துடனும் பேச முடியாமல் நிற்கவும் முடியாமலும் மிகவும் அவதிப்பட்டார். இதைப் பார்த்த பலரும் விஷாலுக்கா இந்த நிலைமை என அவர் மீது பரிதாபப்பட்டனர்.

மேலும், தமிழ் நடிகர்களில் 6 அடி நீளம், கட்டுக்கோப்பான உடல்வாகு, 6 பேக்ஸ் போன்றவற்றால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் விஷால், அப்படி இருக்கையில் தற்போது நின்று கூட பேச முடியாத நிலைக்கு அவர் போனதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் பேசி வருகின்றனர்.

விஷாலை விமர்சித்த சுசித்ரா

இந்நிலையில், விஷாலின் இந்த நிலை தனக்கு சந்தோஷத்தை தருவதாக பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "ரசிகர்கள் எல்லாம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறீர்கள். நீங்க எல்லாம் விஷாலுக்காக பரிதாபப்படும் இந்த நேரத்துல நான் அவரப்பத்தி சில விஷயங்கள் சொல்லப் போறேன். இது கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.

கண்ணு பல்லு எல்லாம் மஞ்ச கலர்

கார்த்திக் குமார்ன்னு ஒரு கழுதை புருஷன்னு சொல்லி வீட்ல உக்காந்து இருக்கும். அது அப்பப்போ எங்க போகும்னே தெரியாது. எங்கயாவது ஓடி போயிடும். ஒருநாள் அந்த கழுதை வீட்ல இல்லாதப்போ வீட்டோட காலிங் பெல் அடிக்குது.

நான் போய் கதவ தொறந்து பாத்தா விஷால் நிக்குறான். அவன் கண்ணு எல்லாம் மஞ்ச கலர், பல்லு எல்லாம் மஞ்ச கலர்ல இருக்கு. அவன் கைல வேற ஒரு ஒயின் பாட்டில் இருக்கு. அப்போ கார்த்திக் இல்லையான்னு கேட்டான். நான் இல்லன்னு சொல்லிட்டேன்.

அசிங்கமா திட்டுனேன்

அப்புறம் என்கிட்ட நான் வீட்டுக்குள்ள வரலாமான்னு கேக்குறான். நான் முடியாதுன்னு சொன்னேன். அப்போ நான் இந்த ஒயின் பாட்டில கார்த்திக் குமாருக்கு கொடுக்க வந்தேன்னு சொல்றான்.

புருஷன் வீட்ல இல்லாத டைம்ல இவர் வைன் கொடுக்க வருவாரு. நான் அவன் கௌதம் மேனன் ஆபிஸ்ல இருக்கான், போய் பாருங்கன்னு சொன்னேன்.

அப்புறம் நான் அவனை திட்டினேன். இது விஷால் காதுல விழுந்துடுச்சி. என்னன்னு கேட்டப்போ எங்க வீட்டுக்கு வர பூனைய சொன்னேன் உங்கல இல்லன்னு சொல்லிட்டேன்.

எனக்கு ரொம்ப சந்தோஷம்

இதுதான் உங்க விஷால் அவருக்காக தான் நீங்க எல்லாம் வேண்டிக்குறீங்க. ஆனா அன்னைக்கு ஒயின் பாட்டில் புடிச்சிட்டு இருந்த கை தான் இன்னைக்கு நடுங்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம் இப்படி பாக்குறதுக்கு" எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.