'நயன்தாரா ஒரு சிதறு தேங்கா பிச்சைக்காரி.. சொகுசுப் பூனை..' கோவத்தில் கொதித்த சுச்சி!
நயன்தாரா தமிழ் யூடியூபர்ஸ்களை விமர்சித்ததை அடுத்து பாடகி சுசித்ரா நயன்தாராவை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தனது ஆவணப்பட சர்ச்சை குறித்தும், தன் தனிப்பட்ட வாழ்க்கை, தனுஷ் பிரச்சனை, விமர்சனங்கள் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட் ரிப்போர்ட்டர் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அது மிகவும் வைரலாகி தமிழ்நாட்டில் பிரச்சனை எழுந்த நிலையில், யூடியூபர்ஸ் பலரும் நயன்தாராவிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பிஹைண்ட் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, நயன்தாராவின் கேரக்டரை விமர்சித்து காட்டமாக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நான் கண்மூடித்தனமா இருந்துட்டேன்
அந்த பேட்டியில், "நயன்தாரா தனுஷூக்கு எதிரா லெட்டர் எழுதினப்போ நாண் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுனேனே. தனுஷுக்கு எதிரா அவங்க தன்னோட ஒபீனியன் வச்சத பெரிசா பேசுனேன். ஆனா கேஸா பாத்தா 10 கோடிங்குறது ரெண்டு பேருக்குமே டிப்ஸ் கொடுக்குற காசு.