Animal Movie: ‘அனிமல் படம் அனிமலுக்குதான்’ - சாட்டையை சுழற்றிய ஸ்ரீநிவாஸ்! - வைரல் ஆகும் பதிவு!-singer srinivas slams sandeep reddy vanga ranbir kapoor animal movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Animal Movie: ‘அனிமல் படம் அனிமலுக்குதான்’ - சாட்டையை சுழற்றிய ஸ்ரீநிவாஸ்! - வைரல் ஆகும் பதிவு!

Animal Movie: ‘அனிமல் படம் அனிமலுக்குதான்’ - சாட்டையை சுழற்றிய ஸ்ரீநிவாஸ்! - வைரல் ஆகும் பதிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 28, 2024 05:36 PM IST

தமிழில் ஆர்.ஜே.பாலாஜி, கேமராமேன் சித்தார்த்தா நுனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தை சாடியிருந்தார்.

ஸ்ரீநிவாஸ் காட்டம்!
ஸ்ரீநிவாஸ் காட்டம்!

இந்தப்படத்தில் சில குறிப்பிட்ட காட்சிகளில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாகச் சொல்லி, பலரும் இந்தப்படத்தை விமர்சனம் செய்தனர். தமிழில் ஆர்.ஜே.பாலாஜி, கேமராமேன் சித்தார்த்தா நுனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தை சாடியிருந்தார்.

 

இந்த நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸூம் தற்போது இந்தப்படத்தை விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஸ்ரீநிவாஸ், “ விலங்கு என்பது விலங்கிற்காக.. ஆகையால் நான் உண்மையான விலங்குகளை புண்படுத்தவில்லை” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, இந்தப்படத்தில் நடிகை த்ரிப்தி டிம்ரி, ரன்பீரின் இன்னொரு காதலியாக வந்திருப்பார். அவர் தொடர்பான காட்சிகளில் அவர் ரன்பீருடன் மிக மிக நெருக்கமாக நடித்திருந்தார். அப்படி அமைக்கப்பட்ட ஒரு காட்சியில், ரன்பீர் மீது வைத்திருக்கும் காதலை நிரூபிக்க, த்ரிப்தியை தன்னுடைய ஷூவை நாக்கைக்கொண்டு நக்க சொல்வார் ரன்பீர்.

இந்த காட்சி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், இந்த காட்சி குறித்து, த்ரிப்தி டிம்ரி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இணையதளத்திற்கு பேசினார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ இந்த சமயத்தில் என்னுடைய ஆக்டிங் கோச் சொல்லிக்கொடுத்த தங்க விதியை நினைவு படுத்துகிறேன்.

அவர், நீ உன்னுடைய கதாபாத்திரத்தை எப்போதும் எடை போடாதே.. அது நீ நடிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும், அல்லது சக நடிகர் நடிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, இங்கு எல்லாருமே மனிதர்கள்தான். மனிதர்களுக்கு நல்ல பக்கமும் இருக்கிறது. கெட்ட பக்கமும் இருக்கிறது.

ஒரு நடிகரானவன் நல்ல கதாபாத்திரம், கெட்ட கதாபாத்திரம், அசிங்கமான கதாபாத்திரம் என எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தயாராக இருக்க வேண்டும்.

உன்னுடைய கதாபாத்திரத்தின் எண்ணங்கள், அந்த கதாபாத்திரத்திற்கு உரித்தான உந்துதல் ஆகியவற்றை எடை போட்டால், நீ அந்த கதாபாத்திரத்தை முழு உண்மைத்தன்மையோடு செய்ய முடியாது என்பார். அதை நான் மனிதில் வைத்துக்கொண்டேன்.” என்று பேசினார்.

ஒரு பெண் உன்னுடைய மனைவி, குழந்தைகள், தந்தை ஆகியோரை கொலை செய்து விடுவேன் என்று என்னிடம் சொல்லும் பட்சத்தில், நான் அவரை அடிப்பேன்.

ஆனால், இங்கு அந்த கதாபாத்திரம் அவனுடைய ஷூவை நக்கச் சொன்னது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த கதாபாத்திரம் அங்கிருந்து சென்று விட்டது.

அந்த காட்சிக்குள், மிகவும் ஆழமான எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில், அவள் எங்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறாளோ அங்கு அவளை கொண்டு சென்று விட்டு விடுங்கள் என்று கூறி விட்டு அந்த கதாபாத்திரம் செல்லும்” என்று பேசினார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.