Shweta Mohan: ‘அவர அங்கதான் முதல்ல பார்த்தேன்.. நோ மீன்ஸ் நோ தான்.. குழந்தைய ரொம்ப கவனமா’ - ஸ்வேதா காதல் கதை!
என்னுடன் அன்றைய தினம் என்னுடைய தோழி வந்திருந்தாள் நான் உடைந்து போய் அழுவதை பார்த்த அவள், தயவுசெய்து இன்று என்னுடன் வீட்டுக்கு வா என்று சொல்லி,அவளது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள். அங்கு தான் அவளுடைய சகோதரரும், இன்று என்னுடைய கணவராக இருக்கும் அஸ்வினை சந்தித்தேன்.

ஸ்வேதா மோகன்
பிரபல பாடகியான ஸ்வேதா மோகன் தன்னுடைய காதல் கணவர் குறித்தும், குழந்தை குறித்தும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசினார்.
அவர் பேசும் போது, “வாழ்க்கையில் ஈகோவால் வரக்கூடிய சில முரண்பாடுகளால், சில பேர் புண்படலாம். அதனால் நமக்கு வரக்கூடிய தடைகள், நம் மனதை நிச்சயமாக புண்படுத்துவதாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் பின்னால் பார்க்கும் பொழுது, அவை நம்மை, நம்முடைய வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் புரிதலோடு நடப்பதற்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன.
என்னுடைய குணங்களில் எனக்கு மிகவும் பிடித்தது, எனக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வந்தாலும், அதனுடைய பாசிட்டிவான பக்கத்தையே பார்ப்பது.