தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Singer Saindavi's Birthday Is Today

HBD Saindhavi: 'புதுசு கண்ணா புதுசு.. பழசா இருந்தாலும் இன்றும் தினுசு' சைந்தவி என்ற செல்லப் பாடகி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 03, 2024 06:15 AM IST

'புதுசு கண்ணா புதுசு.. பழசா இருந்தாலும் இன்றும் தினுசு' என்று வலம் வரும் செல்லப் பாடகி சைந்தவி அவர்களின் பயணம் இன்னும் நீண்ட தூரம் கேட்க வேண்டியிருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைந்தவி மேடம்.

பாடகி சைந்தவி பிறந்தநாள்
பாடகி சைந்தவி பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

1989 ஜனவரி மூன்றாம் தேதி ஶ்ரீவத்சன் - ஆனந்தி தம்பதியினரின் மகளாக சென்னையில் பிறந்தார். செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் கல்வியை தொடர்நதார். அதோடு சிறு வயதில் இருந்தே தன் இசை ஞானத்தையும் வளர்த்து கொண்டு வந்தார். தனது பன்னிரண்டு வயதிலேயே பாடல்கள் பாடும் அளவுக்கு தன்னை வளர்த்து கொண்டார். தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத கச்சேரிகளில் கலந்து கொண்டார். 

திரை உலக பயணம்.

தனது தமிழ் திரை இசையின் முதல் பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த "அந்நியன்" படத்தில் "ரெண்டக்க ரெண்டக்க அண்டங்காக்கா கொண்டக்காரி" என்று உற்சாகமாக பாடிய இசைப்பயணம் ஆரம்பித்தார். இப்படி முதல் பாடலே எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.  இந்த பயணம் பதினெட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் துள்ளாய் இசைப்பயணம் தொடர்கிறார். ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர், அனிருத், விஜய் ஆண்டனி, இமான், வித்யாசாகர், மணிஷர்மா, ஸ்ரீநிவாஸ் என்று அத்துனை இசை அமைப்பாளர்களோடும் இவரது குரல் பயணிக்கிறது. பாடலாசிரியர்கள் தங்கள் வரிகளுக்கு தனது குரலால் ஆத்மா தருவார் என்று இவரை பரிந்துரை செய்வதும் இயல்பாக நடக்கிறது.

அடடா மழைடா..அட மழைடா..

எள்ளு வய பூக்கலயே..

சக்கரைமில்லு..சக்கரைமில்லு..

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள..

இரை தேடும் இரவினிலே..

கையிலே ஆகாசம்.. என்று பல பாடல்களை பாடுவதோடு... அந்தந்த கவிஞர்களின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து இயக்குனர்களின் உணர்வை கேட்பவர்களின் மனதுக்குள் கடத்தி தனது குரலால் மாயம் செய்வார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் நெடுந்தொடர்கள், இசைஆல்பங்கள் என்று பறக்கிறார்.. தெலுங்கிலும் பாடுவது கூடுதல் சிறப்பு..

கொஞ்சலும்,கெஞ்சலுமாய்..

கோபமும், மகிழ்ச்சியுமாய்..

பதட்டமும்,நிதானமுமாய்.. 

உற்சாகமும், உருக்கமுமாய்..

அழுகையும், சிரிப்புமாய்..  தனது குரலை உச்சத்தில் உயர்த்தியும், ரகசியமாய் இறக்கியும், சமப்படுத்தலுமாய் திரைக்காட்சிகளின் உணர்வுகளை முழுமையாக நமக்குள் கடத்தும் ஆற்றல் பெற்றவர் சைந்தவி.

இவர் கடந்த  2013 ஜூன் 27 அன்று இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பின்னர் ஜி.வி. இசையை விட மற்றவர்கள் இசையில் தான் அதிகம் பாடி உள்ளார்.

கடந்த ஆண்டு சவுண்ட்ஸ் ரைட் என்ற பெயரில் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரையும் சொந்தமாக நடத்தி வருகிறார். 

'புதுசு கண்ணா புதுசு.. பழசா இருந்தாலும் இன்றும் தினுசு' என்று வலம் வரும்  செல்லப் பாடகி சைந்தவி அவர்களின் பயணம் இன்னும் நீண்ட தூரம் கேட்க வேண்டியிருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைந்தவி மேடம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.