'பயந்து நடுங்கி பாடுன பாட்டு.. இப்போ பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டு.. தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் கதை..
குட் பேட் அக்லி படத்தில் வந்த தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டு ஹிட் அடித்த நிலையில், அந்தப் பாடல் உருவான விதம் குறித்து பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பகிர்ந்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாட்டுகளில் ஒன்றான் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டு ஹிட் அடித்த நிலையில், அந்தப் பாடல் உருவான விதம் குறித்து பாடகர் புஷ்பவனம் குப்புசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பெரும பட எதுவும் இல்ல
நான் இந்த பாட்டுல பெருசா எதுவும் பண்ணல. மியூசிக் டைரக்டர்ஸ் என்ன ட்யூன் கொடுக்குறாரோ அதுக்கு தகுந்த மாதிரி தான் நாங்க பாடுவோம். இந்த மாதிரி பாட்டு எல்லாம் கொடுத்ததுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும், அதே மாதிரி இந்த வாய்ப்பு கொடுத்தவங்களுக்கும் நன்றி சொல்லனும், அதுனால இதுல நான் பெருமைபடுறதுக்கு எதுவுமே இல்ல.
எல்லாருக்கும் நன்றி சொல்லனும்
குட் பேட் அக்லி படத்துல தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டப் பாத்து இந்த காலத்து பசங்க எல்லாம் பழைய பாட்ட பாக்க போறாங்க. இந்தப் பாட்டு நான் சினிமாத் துறைக்காக பாடுன ரெண்டாவது பாட்டு. உண்மையிலயே இவன பாட வச்சா இந்த பாட்டு ஹிட் ஆகும்ன்னு நெனச்ச தரணி சாருக்கு தான் நன்றி சொல்லனும். அதே மாதிரி எதிரும் புதிரும் பட டைரக்டர் தான் நான் தான் இந்த பாட்ட பாடணும்ன்னு அடம் பிடிச்சிருக்காரு. அதுக்கு வித்யாசாகர் சாரும் ஒத்துக்கிட்டாரு.
பயந்து நடுங்கி பாடுனேன்
அங்க போன உடனே பாடினேன். அங்கப் போன நான் பாடுன பாட்டுல பாடகருக்கான வாய்ஸ் எல்லாம் இல்ல. அப்படியே இன்னசென்டான வாய்ஸ் தான் வந்தது. அப்போ எனக்கு பயம்ன்னா பயம் அப்படி ஒரு பயம். நடுங்கிட்டே பாடுனேன். ஆனா இப்போ கேட்டு பாத்தா எப்படி இருக்கு. பாட்டு கேக்கும் போது எதுவும் தெரியல. ஆனா உண்மையா நடந்தது இதுதான். இந்த பாட்டுக்கு எல்லாம் நான் அவங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.
குட் பேட் அக்லி வைரல் பாடல்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப்படத்தில் மலையாள நடிகையாக பிரியா வாரியர் அர்ஜூன் தாஸின் காதலியாக நடித்தார். படத்தில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும், அர்ஜூன் தாஸூடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மீண்டும் வைரலானேன்
இதுகுறித்து பேசிய அவர், ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பலரும் 2018ல் ‘அடார் லவ்’ படத்தில் நான் வைரலானது போல மீண்டும் வைரல் ஆகிவிட்டாய் என்று என்னிடம் சொல்கிறார்கள்.
தீவிர ரசிகையா மாறிட்டேன்
உண்மையில் நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கலாம் என்பதுதாகத்தான் இருந்தது. ஒரு கிளாசிக் ரெட்ரோ பாடல்.. அதுவும் சிம்ரன் மேம் பாடிய பாடலுக்கு, நான் சரியான பங்களிப்பை கொடுப்பேன் என்று இயக்குநர் ஆதிக் நம்பியதற்கு நன்றி. நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று பேசினார்.
