Singer Chitra: ராமர் மந்திரம், விளக்குகள் ஏற்ற சொன்ன பாடகி சித்ராவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு
ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் மந்திரத்தை கூறுங்கள், ஐந்து முகம் கொண்ட விளக்குகளை ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்த பாடகி சித்ராவுக்கு எதிராக கேரளாவில் பலத்த எதிர்பபு எழுந்துள்ளது.

பாடகி சித்ரா
சின்ன குயில் என்று அழைக்கப்படும் சித்ரா தனது சமூக வலைத்தளத்தில் விடியோ ஒன்றை வெலியிட்டுள்ளார். அதில் அவர், " ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறும் நாளில் பகல் 12. 30 மணிக்கு ஸ்ரீ ராமா, ஜெயராமா, ஜெய் ஜெய் ராமா என மந்திரத்தை கூற வேண்டும்.
வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலை பொழுதில் ஏற்ற வேண்டும். இறைவன் ஆசியானது அனைவரின் மீது பொழிய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சித்ராவின் பேச்சுக்கும், அவரது இந்த விடியோவுக்கும் கேரளாவில் பல்வேறு கண்டன குரல்கள் எழும்பின. இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது.
