'என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன்.. நீங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.. அதுனால என்ன குறை சொல்றீங்க'- பாடகி கெனிஷா
நீங்க எல்லாம் உங்க வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாததுனால் தான் என் மீது குறை சொல்லி அதைவைத்து சந்தோஷப்பட்டுட்டு இருக்கீங்க என பாடகி கெனிஷா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாடகி கெனிஷா நடிகர் ரவி மோகனுடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய சோல்மேட்டை பார்த்துவிட்டதாக கெனிஷா கூறியுள்ளார். இதுபற்றி அவர் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சோல்மேட் கிடைக்க உறுதிமொழி
அந்த பேட்டியில் சோல்மேட் குறித்து பேசிய கெனிஷா, உலகத்தில் ஒருவருக்கு மொத்தம் 7 சோல்மேட் இருப்பதாக சொல்கின்றனர். அதை பலரும் கட்டுக்கதை என்றும் கூறுகின்றனர். 7 இல்லை என்றாலும் குறைந்தபட்சம் 1 சோல்மேட்டையாவது எல்லாரும் கொண்டிருப்பர். அதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அல்லது மனிதர்களுக்கு அது கிடைத்தே தீர வேண்டும். அதற்கு நாம் தான் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 7 சோல்மேட்டை பார்ப்பதற்குள் நம் முடி எல்லாம் நரைச்சு போய் நாம் வயதானவர்களாக மாறிவிடுவோம் என்றும் அவர் கூறினார்.