பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று!

பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று!

Marimuthu M HT Tamil
Nov 21, 2024 11:04 AM IST

பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று என்பது குறித்துப் பார்ப்போம்.

பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று!
பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று!

கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ என்னும் உயரிய விருதைப் பெற்றவர். 1992ஆம் ஆண்டு ஹரிஹரன் மற்றும் குல்ஷன் குமார் பாடிய ஹனுமன் பாடல்கள், இதுவரை 3 பில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி பார்க்கப்பட்ட பக்திப்பாடலாக இருக்கிறது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆகும்.

ஹரிஹரனின் குடும்பமே பெரிய இசைப்பாரம்பரியம் கொண்டது, இசைக்கலைஞர்களான எச்.ஏ.எஸ். மணி மற்றும் அலமேலு மணி தம்பதியினருக்கு 1955ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தவர், ஹரிஹரன். ஹரிஹரன் பிறப்பால் ஒரு தமிழர். தனது எட்டு வயதில் தந்தையை இழந்தாலும் மும்பையில் வளர்ந்த ஹரிஹரன், மாட்டுங்காவில் உள்ள டான் போஸ்கோ உயர் நிலைப்பள்ளியில் பயின்றார். பின், எஸ்.ஐ.இ.எஸ் கலை அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் இளங்கலை பட்டமும், செயிண்ட் சேவியல் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.

பின்னணிப் பாடகராக ஹரிஹரனின் அறிமுகம்:

தனது படிப்பிற்குப் பின், ஹரிஹரன் பல மேடைக்கச்சேரிகளில் பரவலாகப் பாடினார். 1992ஆம் ஆண்டு, ஏ.ஆர். ரஹ்மானின் ரோஜா படத்தில் ‘தமிழா தமிழா’ என்னும் தேசபக்திமிக்கப் பாடலைப் பாடி, திரைப்பின்னணிப் பாடகராக சினிமாவில் அறிமுகம் ஆனார். அடுத்து பம்பாய் திரைப்படத்தில் ‘உயிரே உயிரே’என்னும் பாடலைப் பாடி பிரபலமானார். அதன்பின், முத்து, மின்சாரகனவு, ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், இந்திரா, இருவர், அன்பே ஆருயிரே ஆகியப் படங்களில் எல்லாம் ஹரிஹரனின் வாய்ஸ் தனித்து நின்றது.

குறிப்பாக, 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பாடல்களையும் 200க்கும் மேற்பட்ட இந்திப் பாடல்களையும் பாடி பிரபலமான பாடகராக இந்தியா முழுக்க அறியப்படுகிறார்.

தவிர, இந்தியாவின் பிரத்யேக இசையான கஜல் பாடல்களைப் பாடுவதில் தேர்ந்தவர். முப்பதுக்கும் மேற்பட்ட கஜல் பாடல்களை இசையமைத்து பாடியும் இருக்கிறார், ஹரிஹரன்.

2010ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்கவிழாவில் ‘ஸ்வாகதம்’ என்ற பாடலைப் பாடினார்.

பெற்ற முக்கிய விருதுகள்:

2011ஆம் ஆண்டு, பாடகர் ஹரிஹரனுக்கு பாட்டிண்டே பழஞ்சி என்னும் படத்தில் பாட்டு பாடுவான் என்னும் பாடலைப் பாடியமைக்காக கேரள அரசின் மாநில விருது கிடைத்தது.

1995ஆம் ஆண்டு, ஆசை படத்தில் கொஞ்சம் நாள் பொறு தலைவா என்னும் பாடலைப் பாடியமைக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெற்றார், ஹரிஹரன்.

1999ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசால் வழங்கப்படும் நந்தி விருதினை ‘அண்ணய்யா’திரைப்படத்திற்காக ‘ஹிமா செமல்லோயல்லோ’ என்னும் பாடலைப் பாடிப் பெற்றார்.

அத்தகைய பிரபலமான பின்னணிப் பாடகர் ஹரிஹரன் சற்று காலம் பெரியளவில் வெளியில் எங்கும் தலைகாட்டாமல் இசைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

கேரளாவில் வயதான தோற்றத்தில் இருந்த ஹரிஹரன்:

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த ஹரிஹரன் மிகுந்த வயதான தோற்றத்துடன் உடல் நிலை குன்றிய நிலையில் காணப்பட்டார். அடையாளம் தெரியாமல் காணப்பட்டார்.

மேடையை நோக்கி அருண் அருண் என்று அவர் செல்ல முற்படுகையில் காவல் துறையினர், அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் கண்ணீர்விட்ட ஹரிகரன், மேடையில் ஏறியதும் காதலுக்கு மரியாதை படத்தில் அவர் பாடிய ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ என்னும் பாடலை பாடியதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.

ஹரிஹரனுக்கு என்ன தான் ஆச்சு எனப்பலரும் புலம்ப, தான் பிராங்க் செய்ததாக சமூக வலைதளம் மூலம் பதிலளித்துள்ளார், பின்னணிப் பாடகர் ஹரிஹரன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.