C.S.Jayaraman: வற்றாத குரலோன்..நீங்காத தடம் பதித்த சி.எஸ்.ஜெயராமன்
பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
பராசக்தி படத்தில் இடம்பெற்ற கா கா கா, நெஞ்சு பொறுக்குதில்லையே மற்றும் புதையல் படத்தில் இடம்பெற்ற விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, ஆகியப் பாடல்களைப் பாடிய சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
யார் இந்த சி.எஸ். ஜெயராமன்? - பிரபல கர்நாடக பாடகர் சிதம்பரம் சுந்தரம்பிள்ளையின் மகனாக ஜனவரி 6,1917ஆம் ஆண்டு பிறந்தவர், ஜெயராமன். அதனால் இவரது முழுப்பெயர் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை மகன் ஜெயராமன் என்பதாகும். அதைச் சுருக்கி சி.எஸ். ஜெயராமன் அழைக்கப்படுகிறார். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதல் தாரமான பத்மாவதியின் அண்ணனும், கருணாநிதியின் மைத்துநராகவும் அறியப்படுகிறார். இவர் தனித்துவமிக்க குரல் மூலம் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். பாடலைச் சொன்னால் அது இவர் பாடியதா என்று சொல்லும் அளவுக்கு, இவரது குரலுக்கு அன்றைய காலத்தில் மிகப்பெரிய மவுசு இருந்தது.
ஏ.எஸ்.ஏ சாமி என்று அழைக்கப்படும் மூத்த திரைக்கதை எழுத்தாளர் மூலமாக திரைத்துறையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு திரைத்துறையில் எழுத்தாளராக வாழ்க்கையைத் தொடங்கி வைத்தவர், ஜெயராமன் ஆவார்.
திரைத்துறை பங்களிப்பு: சி.எஸ். ஜெயராமன் 1934ஆம் ஆண்டு கிருஷ்ண லீலா என்னும் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். பின், பக்த துருவன், நல்ல தங்காள், லீலாவதி சுலோச்சனா, பூம்பாவை போன்ற சில படங்களில் முக்கிய நடிகராக நடித்தார். அப்படியே இசையைப் பயின்று வந்த சி.எஸ். ஜெயராமன், நாம் மற்றும் ரத்தக்கண்ணீர் ஆகியப் படங்களின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.
பின் இவரது தனித்துவமான குரல் வளம் காரணமாக,1952ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தில் உடுமலை நாராயணகவி எழுதிய கா கா கா காக்கை அண்ணாவே நீங்க என்னும் பாடலையும், அதே படத்தில் நெஞ்சு பொறுக்குதில்லையே எனும் பாடலையும் பாடினார்.
பின் புதையல் படத்தில் இவர் பாடிய விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே எனும் பாடலும்; தனது சொந்த இசையில் ரத்தக்கண்ணீர் படத்தில் குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொண்டது என்பது ஏது ஆகியப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தன.
தெய்வப் பிறவி என்னும் சிவாஜி கணேசன் நடித்த படத்தில், தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் என்னும் பாடலையும், அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் ஆகியப் பாடலையும் சி.எஸ். ஜெயராமன் தனது மதுரமான குரலில் பாடினார். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான் என்னும் பாடலைப் பாடிய சி.எஸ். ஜெயராமன் பாவை விளக்கு என்னும் பாடலில் காவியமா நெஞ்சன் ஓவியமா என்னும் பாடலையும் பாடி பிரபலம் ஆனவர்.
இப்படி திரைத்துறையில் தனக்கென ஒரு தனிகுரல் வளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருந்த சி.எஸ்.ஜெயராமனின் 29 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. வற்றாத கடல் போல் என்றும் இந்த உலகத்தில் வாழும் கலைஞராக இவர் இருப்பார் என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்