'வைரமுத்து பெயரை குறிப்பட்டது நான் மட்டுமல்ல.. அனைவருக்காகவும் பிராத்திகிறேன்..' பஞ்சாயத்தை கிளப்பிய சின்மயி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'வைரமுத்து பெயரை குறிப்பட்டது நான் மட்டுமல்ல.. அனைவருக்காகவும் பிராத்திகிறேன்..' பஞ்சாயத்தை கிளப்பிய சின்மயி

'வைரமுத்து பெயரை குறிப்பட்டது நான் மட்டுமல்ல.. அனைவருக்காகவும் பிராத்திகிறேன்..' பஞ்சாயத்தை கிளப்பிய சின்மயி

Malavica Natarajan HT Tamil
Published Jun 11, 2025 03:16 PM IST

பாடலாசிரியர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துந்புறுத்தியதாக கூறிய நிலையில், பாடகி சின்மயியின் எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.

'வைரமுத்து பெயரை குறிப்பட்டது நான் மட்டுமல்ல.. அனைவருக்காகவும் பிராத்திகிறேன்..' பஞ்சாயத்தை கிளப்பிய சின்மயி
'வைரமுத்து பெயரை குறிப்பட்டது நான் மட்டுமல்ல.. அனைவருக்காகவும் பிராத்திகிறேன்..' பஞ்சாயத்தை கிளப்பிய சின்மயி

ட்ரெண்டிங்கில் சின்மயி

முன்னதாக, சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடகி தீ பங்கேற்க முடியாத சூழலால், தமிழில் தீ பாடிய முத்த மழை பாடலை சின்மயி பாட நேரிட்டது. இந்த பாடலை அவர் பாடிய விதம் அனைவரையும் மெய்மறக்க செய்யும் விதமாக அமைந்ததால், அவரது குரல் சில நாட்களாக தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது.

சின்மயி குற்றச்சாட்டு

இந்த சமயத்தில் தான் பாடகி சின்மயி, தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டிருந்ததும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தன. இதையடுத்து, சின்மயி பெயருடன் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் டத்தோ ராதாரவி பெயரும் அடிபட்டது. பின், சின்மயி அவரது சமீபத்திய பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாக அவர் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி பேசினார்.

புகராளித்தவர்களில் நான் ஒருவள்

இதனால், அவருக்கு மீண்டும் ஆதரவு பெருகி வருகிறது. அவரது குரலை தடை செய்தவர்களை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் விமர்சித்து வந்த வண்ணமாகவே உள்ளனர். இதற்கு மத்தியில் சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான சின்மயியின் எக்ஸ் தள பதிவில், "அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் திரு. வைரமுத்துவின் பெயரைக் குறிப்பிட்டவள் நான் மட்டுமல்ல. அந்த விவகாரத்தில் சுமார் 16- 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தனர். அவர்களில் நானும் ஒருவள் என்பதை மட்டும் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

என் பெயர் கேட்கிறது

கடந்த சில வருடங்களாக வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டியதால் பல சிக்கல்களை சந்தித்தேன். அவரால் பிழைத்துக் கொண்டிருக்கும் சிலரால் நான் அழிக்கப்பட்டேன். நான் சொன்ன குற்றச்சாட்டுகள் அப்போது கேட்கப்படவில்லை என்றாலும் இப்போது என் பெயர் கேட்கப்படுகிறது.

திறமை மற்றும் தொழில் வெற்றிகரமாக இருந்திருக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் இழந்த காலத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

இவரது இந்தப் பதிவு தமிழ் சினிமாவில் மீண்டும் சூட்டை கிளப்பியுள்ளது. அத்தோடு இவருக்கு தற்போது திரையுலகினர் பலர் ஆதரவு கரம் நீட்டி வருவதால் சின்மயி- வைரமுத்து விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மீ டு விவகாரம்

2018 இல் இந்தியாவின் #MeToo இயக்கத்தின் போது, சின்மயி வைரமுத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினார் மற்றும் இசைத் துறையில் உள்ள மற்றவர்களுக்கு எதிராகவும் அவர் குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். டப்பிங் யூனியனின் தலைவரான ராதா ரவி உடன் ஏற்பட்ட தகராறில் அவர் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து (SICTADAU) நீக்கப்பட்டார்.