Anthony Daasan: 'அதெல்லாம் கெத்து.. 2 பாக்கெட் புல்லா காசு.. ஃபார்ச்சூன் காரு..' அந்தோனி தாசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anthony Daasan: 'அதெல்லாம் கெத்து.. 2 பாக்கெட் புல்லா காசு.. ஃபார்ச்சூன் காரு..' அந்தோனி தாசன்

Anthony Daasan: 'அதெல்லாம் கெத்து.. 2 பாக்கெட் புல்லா காசு.. ஃபார்ச்சூன் காரு..' அந்தோனி தாசன்

Malavica Natarajan HT Tamil
Jan 12, 2025 03:44 PM IST

Anthony Daasan: நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே பாக்கெட் நிறைய சம்பாதித்ததாக பாடகர் அந்தோணி தாசன் கூறியுள்ளார்.

Anthony Daasan: 'அதெல்லாம் கெத்து.. 2 பாக்கெட் புல்லா காசு.. ஃபார்ச்சூன் காரு..' அந்தோனி தாசன்
Anthony Daasan: 'அதெல்லாம் கெத்து.. 2 பாக்கெட் புல்லா காசு.. ஃபார்ச்சூன் காரு..' அந்தோனி தாசன்

அவரது தற்போது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடலைப் பாடி ட்ரெண்டாகி இருக்கிறார். அவர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.

நான் பாடுவேன்னு நினைக்கல

அதில், விடா முயற்சி படத்தில் நான் பாட்டு பாடணும்ன்னு கூட நினைக்கல. அந்த படம் ரிலீஸ் ஆகப் போகுதுங்குற சந்தோஷத்துல தான் நான் இருந்தேன்.

திடீர்ன்னு அனிருத் சார் ஆபிஸ்ல இருந்து போன் வருது. ஒரு பாட்டு இருக்கு. பாட வாங்கன்னு கூப்டப்போ எனக்கு ஒன்னுமே புரியல. சரி ஏதோ சரியான பாட்டு ஒன்னு இருக்கு போலன்னு நானும் ரெடி ஆனேன். ஏன்னா இதுக்கு முன்னாடி அனிருத் சார் கொடுத்த பாட்டு ஒன்னும் எனக்கு பெரிய பேர் கொடுத்தது.

இது தாய்லாந்து மொழி

நான் அனிருத் சார பாக்கப் போனப்போ, தலைவன் டான்ஸ் ஆடிட்டே அப்படியே கம்போஸ் பண்ணிட்டு இருந்தாரு. நானும் அப்படியே ஆடிட்டே பாடிட்டு வந்துட்டேன்.

சவதீகா அப்டீங்குறது தாய்லாந்து மொழி. இந்த வார்த்தைக்கு வாங்கன்னு அர்த்தம். அவங்க மொழியில வாங்க வாங்கன்னு எல்லாரையும் அழைக்குறது தான் இந்தப் பாட்டு.

அதேமாதிரி அவங்க போகும் போது கப்பூங்கா அப்டின்னு சொல்லுவாங்க. அப்படின்னா போயிட்டு வாங்கன்னு அர்த்தம்.

நான் மலாய் மொழியில பாட்டு பாடணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு தாய்லாந்து மொழியிலேயே பாடக்கூடிய வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு கிளம்பிட்டேன்.

அனிருத்துக்கு நன்றி சொல்லணும்

நான் என் சினிமா வாழ்க்கையில நிறைய பேருக்கு நன்றி சொல்லனும்ன்னு ஆசைப்படுறேன். முதல்ல நான் அனிருத் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.

அவர் கொடுத்த எல்லா பாட்டுமே என்ன அடுத்தடுத்த இடத்துக்கு கொண்டு போச்சு. முதல் பாட்டு காக்கிசட்டை படத்துல கட்டிக்கிட பாட்டு, அடுத்தது பேட்ட படத்துல ஆஹா கல்யாணம் பாட்டு, 3வது பாட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது, 4வது பாட்டு டிப்பம் டப்பம்ன்னு எல்லாமே பயங்கர ஹிட் பாட்டு.

இப்போ, அனிருத் சார் 5வதா எனக்கு கொடுத்த பாட்டு சவதீகா பாட்டு. இப்படி ஒவ்வொரு பாட்டும் எனக்கு முத்தான பாட்டா கொடுத்தாரு. அதுனால அனிருத்துக்கும் அவரது டீம்க்கும் என்னுடைய நன்றிகள்.

கெத்தா நினைக்குறேன்

நான் இத கெத்தா நெனக்குறனா என்னென்னே எனக்கு தெரியல. நான் கரகாட்டகாரனா இருந்தப்போவே அதிக சம்பளம் வாங்குனங்கள்ல நானும் என் மனைவியும் ஒருத்தவங்க.

மத்த கலைஞர்கள் 1000 ரூபா வாங்குறாங்கன்னா நாங்க ரெண்டு பேரும் போனா 4000 ரூபாவா அது இருக்கும். அதுக்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்.

பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது

நாங்க உழைப்ப நம்புனோம். கலைமகள நம்புனோம். அதனால தென் மாவட்டங்கள்ல அந்தோனி- ரீட்டான்னா எல்லாருக்குமே தெரியும். எங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.

பெரம்பலூர்- சென்னை ஏரியாவுலதான் எங்கள தெரியாது. மத்தபடி நாங்க எல்லா இடத்துலயும் பெரிய ரீச் பண்ணிருந்தோம்.

அடுத்த வருஷம் கரகாட்ட புரோகிராம் இருந்தா கூட எங்களுக்கு இந்த வருஷமே அட்வான்ஸ் கொடுத்துடுவாங்க.

பாக்கெட் நிறைய காசு

ஒரு மாசத்துக்கு 25 புரோகிராம் நடக்கும். நாங்க ஆடுறது ,பாடுறது காமெடி பண்றத பாத்து அன்பளிப்பு தருவாங்க. அது ரெண்டு பாக்கெட் எல்லாம் நெறஞ்சிருக்கும். அது எங்க சம்பளத்த விட அதிகம்.

நான் பார்ட்சூனர் கார் வச்சிருக்கேன். அது கூட இஎம்ஐல தான் வாங்கிருக்கேன். இன்னும் முழுசா காசு கட்டல.

எல்லார் கிட்டயும் சொல்ல முடியாது

100க்கு 90 பேர் எங்கள வாழ்த்துறாங்க. 10 சதவீதம் பேர் நாம அடுத்தவங்க உழைப்புல வாங்கி சாப்பிடுறதா பேசுவாங்க. இதை எல்லாம் நான் எல்லார்கிட்டயும் போய் சொல்லிட்டு இருக்க முடியாது. நான் உழைப்ப மட்டும் தான் நம்பிட்டு இருக்கேன் என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.