ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெரியர்.. பாடகர் கிரிஷ் பகிரும் உண்மைகள்..
தனது பெயரை ஜிவி பிரகாஷ் மாற்றிய பின் தன் கெரியர் அப்படியே டாப்பிற்கு வந்துவிட்டதாக பாடகரும் நடிகருமான கிரிஷ் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என குரலால் பல அழகிய ஹிட் பாடல்களை மக்களுக்கு திகட்டாமல் கொடுத்தவர் பாடகர் கிரிஷ். இவரது தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மழைக்கு கூட ஒதுங்காதவர்
ஆனால், இவர் மழைக்கும் கூட இசை கற்றுக் கொள்ள ஒதுங்கியது இல்லை எனக் கூறுகிறார். சரிகமப கூட தெரியாது என்று சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து பேசுகையில், என் வீட்டில் பாடகர்கள் என யாரும் இல்லை. நான் மழைக்கும் இசை கற்றுக் கொள்ள சென்றது இல்லை. நான் காலேஜ் படிக்கும் போது மிமிக்ரி எல்லாம் செய்வேன். எஸ்பிபி மாதிரி பேசி, சிரித்து பார்ப்பேன். அப்போ அவரைப் போலவே பாடியும் பார்க்கலாம் என சும்மா ட்ரை பண்ணேன். அந்த சமயத்துல எல்லாம் நான் பாத்ரூம் சிங்கர் தான்,
