மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?
45 நாட்களுக்குள் எப்படியாவது ஆனந்தியின் அக்கா கோகிலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மீண்டும் தலைதூக்கும் மகேஷின் காதல்.. திணறி நிற்கும் அன்பு - இனி என்ன நடக்குமோ?
ஆனந்தியை கம்பெனியை விட்டு விரட்ட நினைத்தால், அவரை ஏன் டைலராக வேலை செய்ய விடவில்லை என மகேஷ் கேட்க அப்போதே நடத்தப்பட்ட போட்டியில் அதிக துணிகளை தைத்து சதித் திட்டங்களுக்கு மத்தியிலும் ஜெயித்தார் ஆனந்தி.
மித்ராவின் சதித்திட்டம்
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மித்ரா, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்டல் பாத்ரூமிற்கு வெளியே சோப்புத் தண்ணீரை ஊற்றி ஆனந்தியின் கையை உடைத்தனர்.
இதனால், ஆனந்தி கார்மெண்ட்ஸிற்கு வந்து எந்த வேலையும் செய்ய முடியாது என நினைத்தனர். ஆனால், ஆனந்தி தன் அக்காவின் திருமண செலவிற்காக காசு ரெடி பண்ண வேண்டும். அதற்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கூறி, உடைந்த கையை வைத்துக் கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். அதை சற்றும் மித்ராவால் ஏற்று கொள்ள முடியவில்லை.