Singapenne Serial: பீறிட்டு வந்த காதல்.. ஆட்டம் கண்ட வார்டன்.. விழி பிதுங்கும் அன்பு! -பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்!
Singapenne Serial: ஹாஸ்டல் வார்டனிடம் மகேஷை நாளைக்கு வரவழைத்து, தான் அன்பை காதலிக்கும் விஷயத்தை சொல்ல வற்புறுத்தினாள். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து வெளியான புரோமோவில், மித்ரா ஹாஸ்டலில் பிரச்சினை செய்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அழகன் என்பவனே இல்லை என்று அவள் கூறினாள். இதைக்கேட்டு கொந்தளித்த ஆனந்தி, யார் சொன்னா அழகன் இல்லை என்று கொக்கரிக்க, அதனை மித்ரா செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டாள்.
தொடர்ந்து, ஹாஸ்டல் வார்டனிடம் மகேஷை நாளைக்கு வரவழைத்து, தான் அன்பை காதலிக்கும் விஷயத்தை சொல்ல வற்புறுத்தினாள். இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன், என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், மகேஷ் தன்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்டாரா என்பதை உறுதி செய்ய, ஆனந்தி கோகிலாவுக்கு போன் செய்தாள். தொடர்ந்து அவளிடம் நடந்த சம்பவம் உண்மையா என்பதை தெரிந்து கொள்ள, சின்ன குழந்தைகளை வைத்து சுயம்பு ஆட்களிடம் கேட்கச் சொன்னாள்.
அவர்களும் மறைமுகமாக இந்த விஷயத்தைப் பற்றி பேச, சுயம்புவின் ஆட்கள் நடந்த சம்பவத்தை உளறிவிட்டனர். இதனை கோகிலா ஆனந்தியிடம் சொல்ல, ஆனந்தி அதிர்ச்சி அடைந்தாள். காரணம் ஹாஸ்டல் வார்டனும் மகேஷூடன் ஆனந்தியை சென்று பெண் கேட்க வந்தது தெரிய வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தி, இவர்கள் ஏன் இதை செய்கிறார்கள் என்று அன்புவிடம் ஆதங்கப்பட்டாள்.
காத்திருக்க முடியாது
அத்துடன் அன்புவிடம், இனிமேலும் நாம் காத்திருக்க முடியாது; உண்மையை வெளியே சொன்னால் மட்டும்தான், நாம் நம்முடைய காதலை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றாள். அத்துடன் ஹாஸ்டல் வார்டனுக்கு போன் செய்து இந்த விஷயம் குறித்து கேட்க, வார்டன் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அவரை ஒரு இடத்திற்கு வரவைத்த ஆனந்தி, ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதோடு, என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வியையும் முன் வைத்தாள். அதற்கு ஹாஸ்டல் வார்டன், மகேஷ் போன்ற ஒரு நல்ல பையன் உனக்கு கிடைப்பதில், உனக்குத்தான் அதிக அளவு லாபம் இருக்கிறது என்று சொல்ல, அது உண்மை என்றாலும், என் மனதில் மகேஷ் இல்லை என்று சொன்னதுதான் மிச்சம். ஹாஸ்டல் வார்டன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
தொடர்ந்து பேசிய அன்பு தானும், ஆனந்தியும் உயிருக்கு உயிராக காதலிக்கும் உண்மையை அப்பட்டமாக போட்டு உடைத்தான். இதற்கிடையே கோகிலாவிற்கு ஃபோன் செய்த ஆனந்தி, இந்த விஷயத்தை பற்றி அம்மா அப்பாவிடம் தற்போதைக்கு கேட்க வேண்டாம் என்று கூறி விட்டாள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்